Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன செய்றதுன்னு தெரியல.. விஜய் புலம்பல்! புஸ்ஸி தலைமறைவு.. மற்றவர்கள் Switch Off.. ஆட்டம் கண்ட தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த டாப் தலைமையும் அப்படியே ஸ்டன் ஆகி உள்ளது. கரூர் விவகாரத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல்.. மொத்தமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்டம் கண்டு உள்ளது.

1. தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடைசியாக அவர் ஒரே ஒரு போஸ்ட் போட்டார் . அதாவது கரூரில் பலியானவர்களுக்கு இரங்கல் போஸ்ட் போட்டார். அதை தவிர விஜய் எதுவும் சொல்லவில்லை.

TVK Vijay

2. தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக விஜய் தொண்டர்களை கூட அனுப்பவில்லை. போய் பாருங்கள்.. உதவி செய்யுங்கள் என்று கூட சொல்லவில்லை.

3. தமிழ்நாடு முழுக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கப்சிப் என்று இருக்கிறார்கள். யாரும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நிற்கவில்லை.

4. இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜுனா கலவரத்தை தூண்டும் வகையில் போஸ்ட் செய்கிறார். அதை தாண்டி ஒரு போஸ்ட் கூட செய்யவில்லை. மக்களை ஆதரிக்கும் விதமாக, ஆறுதல் செய்யும் விதமாக போஸ்ட் செய்யவில்லை.

5. விஜயின் ஆஸ்தான லெப்ட், ரைட் ஹேண்ட் ஆன.. ராஜ் மோகன், அருண், ஜான் போன்றவர்கள் அப்படியே காணாமல் போய் விட்டார்கள். ஒரு வார்த்தை கூட இதில் அவர்கள் பேசவில்லை. இவர்கள் எல்லோரும் போன் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர்.

6. கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள். கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரும் தலைமறைவாகிவிட்டார்.

7. மொத்தத்தில் விஜய் அப்படியே கைவிடப்பட்டு உள்ளார். விஜயுடன் யாரும் இல்லை. அவரும் அமைதியாக இருக்கிறார். அவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் உடன் நிற்கவில்லை.

8. இப்படி மொத்தமாக தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த டாப் தலைமையும் அப்படியே ஸ்டன் ஆகி உள்ளது. விஜய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. விஜய்யின் அடுத்த கட்டத்தில் உள்ள ஆதவ் அர்ஜுனா, அருண், ஜான், ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த் யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கரூர் விவகாரத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல்.. மொத்தமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்டம் கண்டு உள்ளது.

ஏற்கனவே கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டு உள்ளது. இதனால் மொத்த கட்சியும் ஆட்டம் கண்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+