மெரினா கடற்கரையில் 4 சமாதி இருக்கு! அதை யாரு இடிக்கிறது? அனகாபுத்தூர் விவகாரத்தில் டென்சன் ஆன சீமான்
சென்னை: இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே?.. கடற்கரை கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. என்று சீமான் ஆவேசமாக பேசினார். பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு என்றும் அவர் கூறினார்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் இன்று அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அங்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:-

கட்டும்போதே ஏன் தடுக்கவில்லை?
மக்களுடைய வாழ்விடங்களை இடிப்பதை நீங்க பார்த்து இருப்பீங்க.. இந்த பிரச்சினை இப்போது இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது தான். அப்போது நாங்க தான் இதே இடத்தில் நின்று போராடி தடுத்தோம். கொஞ்ச நாள் தடுத்து வச்சுருந்தோம். இப்போ மீண்டும் அதே பிரச்சினை. பல்லாவரம் அனாகபுத்தூர் மட்டுமில்லை. சென்னையில் பல இடங்களில் நம் மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அப்புறப்படுத்தியது எல்லாருக்கும் தெரியும்.
இப்போ இங்க ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி அப்புறப்படுத்துறாங்க.. எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் வருகிறது. அந்த மக்களுக்கும் அந்த கேள்வி தான்.. இது நீர் நிலைப் பகுதி என்று தெரிகிறது. அப்போது அதை ஆக்கிரமித்து கட்டும்போது யாரும் ஏன் தடுக்கவில்லை. அப்போது எல்லாரும் என்ன பண்ணிக்கொண்டு இருந்தீங்க.. ஆக்கிரமிக்கும் போதே தடுத்திருந்திருக்கலாம்.
திடீரென கிளம்பு என்றால் எப்படி?
அவங்க கஷ்டப்பட்டு வீடு கட்டு, மின் இணைப்பு பொருத்தி, வீட்டு வரி செலுத்தி, ஓட்டுரிமை வாங்கி, சாலைகள் கூட அவர்களே அமைத்தார்கள் என்று சொல்கிறார்கள். ஒரு 60 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார்கள். இப்போது திடீரென்று ஒரே நாளில் வேறு ஒரு இடத்தில் போட்டால் எப்படி?.. இவங்க குழந்தைகள் எல்லாரும் இங்க படிக்கிறாங்க. திடீரென மாறும் போது என்ன செய்வார்கள்..
மெரினாவில் 4 சமாதி இருக்கு
ஆ.. ஊன்னா அதிகாரம் படைத்தவர்கள் நீதிமன்றத்தை கை காட்டி விடுகிறார்கள். உங்கள் பலருக்கும், மனசாட்சி உள்ள எல்லாருக்கும் தெரியும். பல நீதிமன்றங்களே நீர் நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கு. குறிப்பாக மதுரை உயநீதிமன்ற கிளை, திருவள்ளூர் நீதிமன்றம் என பல இடங்கள், பல அரசு குடியிருப்புகள்.. வள்ளுவர் கோட்டமே.. இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?
இதை ஏன் யாரும் கேட்கவில்லை
அது ஆக்கிரமிப்பா இல்லையா.. மனசான்று இருக்க யாராவது சொல்லுங்க பார்ப்போம். ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களே?.. கடற்கரை கடற்கரை தானே.. இது எப்படி கல்லறைகளாக மாறியது.. இதை ஏன் யாரும் கேட்கவில்லை.. உலகின் தலைசிறந்த கடற்கரையில் 2வது கடற்கரை.. ஆஸ்திரேலியாவுக்கு பிறகு சென்னை கடற்கரை.. எப்படி சில பேருக்கு இது கல்லறையாக மாறியது. எம் எம் டிஏ காலனி மாதிரி பல அரசு கட்டிடங்களே நீர்நிலைகளில் தான் கட்டப்பட்டிருக்கிறது.. வேண்டும் என்றால் வாங்க காட்டுகிறேன்.. இவ்வாறு சீமான் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications