சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாள் லீவு முடிஞ்சி போச்சு.. சொந்த ஊரில் இருந்து படையெடுக்கும் மக்கள்.. சென்னையில் செம டிராபிக்

Google Oneindia Tamil News

சென்னை: வார இறுதி, சுதந்திர தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மக்கள் வந்து கொண்டிருப்பதால் டோல்கேட்டுகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் நேற்று திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஏற்கெனவே விடுமுறை என்பதாலும் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை சேர்ந்து வருவதாலும் சென்னையிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே புறப்பட்டனர்.

 அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பரபரப்பு.. நடந்தது என்ன? அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பரபரப்பு.. நடந்தது என்ன?

சென்னை

சென்னை

அது போல் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர், படிப்போர் என அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் குவிந்தனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு, பெருங்களத்தூர், செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்பட்ட பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்

தொடர் விடுமுறையால் சுற்றுலா தலங்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இந்த விடுமுறையை பயன்படுத்தி நெடுந்தூரம் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அளவுக்கு அதிகமாக கட்டணம் பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

புகார்கள்

புகார்கள்

இது தொடர்பாக புகார்கள் கிடைக்கப்பெற்றன. எனினும் பலர் கட்டண உயர்வு குறித்து கவலைப்படாமல் 3 நாட்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டார்கள். 3 நாட்கள் லீவு முடிந்த நிலையில் நெடுந்தூரத்தில் உள்ளவர்கள் நேற்றைய தினமே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர்.

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

குறைந்த அளவு தூரத்தில் இருப்போர் இன்று காலை சென்னைக்கு வர தொடங்கியதால் நேற்று இரவு முதலே கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அது போல் சிலர் கார், பைக்குகளில் ஊர்களுக்கு சென்றதால் அவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் செங்கல்பட்டு பரனூர் டோல்கேட், சென்னை டோல்கேட்களில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

English summary
There is a heavy traffic in Chennai and Chengelpet as people returned from their native place after 3 days leave gone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X