யாரு சொன்னா ஹிஜாப் அணிந்து ஓட்டு போடக்கூடாதுன்னு.. உங்க விருப்பம்.. தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: இந்தியா மத சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உள்ளது. மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளியில் பா.ஜ.க ஏஜென்ட் ஆக செயல்படும் கிரிராஜன் என்ற பா.ஜ.க நிர்வாகி, வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றக்கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாஜக முகவர் வெளியேற்றம்
வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து மற்ற கட்சியினர் வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கிரிராஜனை வாக்கு பதிவு மையத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.

பரபரப்பு பதற்றம்
ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த பெண் வாக்காளரை வாக்களிக்க கூடாது என்று முகவர் சொன்னது பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. முகவர் வெளியேற்றப்பட்டதை அடுத்து மீண்டும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

மாநில தேர்தல் ஆணையர் பேட்டி
இதனையடுத்து இதுதொடர்பாக கூறிய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், "இந்தியா மத சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை உள்ளது. மத அடையாளங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு வரக்கூடாது என எந்த நிபந்தனையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
Recommended Video


ஆடை அணிவது அவரவர் விருப்பம்
மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களித்த வந்ததற்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக ஆட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications