சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இது வேற.. ஏன் புது ஆஸ்பத்திரி கட்டவே கூடாதா".. ஓபிஎஸ்ஸுக்கு கேள்வி எழுப்பிய மா.சுப்பிரமணியன்

புதிய மருத்துவமனை கட்டவே கூடாதா என்று மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "250 கோடி ரூபாயில் புதிதாக அமையவிருக்கிற பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் உருவாகிறது.. அதுமட்டும்தான் உண்மை.. புதிய மருத்துவமனை வரவே கூடாதா?" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓபிஎஸ்ஸுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த சில தினங்களாகவே ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்படும் என்ற செய்திகள் திடீரென கிளம்பின.. எனவே, நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு, ஓபிஎஸ் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்..

அதில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா? ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றும் முடிவை முதலமைச்சர்கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி புதிய மருத்துவமனை அமைப்பதை அதிமுக சார்பில் வரவேற்பதாகவும் கூறியிருந்தார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்றக்கூடாது.. ஓபிஎஸ் வலியுறுத்தல்அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்றக்கூடாது.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

 சுப்பிரமணியம்

சுப்பிரமணியம்

இந்நிலையில், ஓபிஎஸ்ஸுக்கு தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதிலளித்துள்ளார்.. சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.. மருத்துவமனையின் வசதிகளை பார்வையிட்ட அவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், சிறிது நேரம் யோகா பயிற்சி செய்தார்.

ஓமந்தூரார்

ஓமந்தூரார்

பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன், "அனைத்து துறைகளையும் ஊக்கப்படுத்துவது போல, பழமை வாய்ந்த சித்த மருத்துவத்துறையும் மேம்படுத்தப்படும்" என்றார்.. அப்போது, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை, மீண்டும் தலைமை செயலகமாக மாற்ற முயற்சி நடைபெறுவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Recommended Video

    முன்கள பணியாளர்களின் உணவில் மோசடி எவ்வாறு சரி செய்தோம் | Ma.Subramanian | Oneindia Tamil
     பன்நோக்குமருத்துவமனை

    பன்நோக்குமருத்துவமனை

    அதற்கு மா.சுப்பிரமணியன், "கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில், புதிய பன்நோக்கு மருத்துவமனை அமைப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.. புதிதாக மருத்துவமனை மட்டுமே கட்டப்படுகிறது.. முதல்வர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல, தென்சென்னையில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்துவதற்கு இன்னமும் 4 ஏக்கர் நிலப்பரப்பில் கூடுதல் கட்டிடங்களை கட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க முடிவெடுத்தார்.

    கிண்டி

    கிண்டி

    அந்த வகையில்தான் அறிவிப்பையும் வெளியிட்டார்.. 250 கோடி ரூபாயில் புதிதாக அமையவிருக்கிற பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் உருவாகிறது.. அதுமட்டும்தான் உண்மை.. ஏன்? புதிய மருத்துவமனை வரவே கூடாதா? அந்த மருத்துவமனை மத்திய சென்னையில் இருக்கு.. அதே செயல்பாட்டுடன்தான் இயங்கி வருகிறது.. இந்த ஆஸ்பத்திரி புதுசு.." என்றார்.

    English summary
    There is no political motive in building a new multi purpose hospital, says Ma subramaniam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X