தலைமைச் செயலகமாக இயங்கிய கோடநாடு: யாரும் தப்ப முடியாது: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: கோடநாடு விவகாரத்தில் எந்த வித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் எண்ணம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
Recommended Video
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பேரவை வளாகம் வெளியே செய்தியாளர்களை சந்தித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையில் வாடுவதாக சமூகவலைத் தளத்தில் தகவல் பரவியது.

தேவநேயப் பாவாணர் பேத்தி
இது முதல்வரின் பார்வைக்கு கொண்டு வந்தததால் தமிழ் ஆட்சி மொழி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதற்கும், வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தமிழறிஞர்கள் குடும்பம்
தமிழறிஞர்களின் குடும்பம் எந்த காலத்திலும் வறுமைக்கு வரக்கூடாது என்ற நிலையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களின் குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கலையும் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து செயல்படும்.

அதிமுக வாதம்
கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி உள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக வாதிடக் கூடாது என்று ஜெயக்குமார் தெரிவிக்கிறார் ஆனால் பேரவையில் இது தொடர்பான வாதத்தை முதலில் முன்னெடுத்து அதிமுகதான்.

ஜெயலலிதா தலைமைச் செயலகமாக்கிவிட்டார்
ஜெயலலிதா இருக்கும் காலத்தில் கோடநாடு பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இணங்கியுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பழி வாங்கவில்லை
நீதிமன்றத்தின் விதியின் படியே விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமும் அரசியல் நடவடிக்கையும் கிடையாது. இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து எந்த காலத்திலும் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபு இல்லை என கோடநாடு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எதிர்கட்சி தலைவரை பேரவையில் பேசவிடாமல், மனரீதியான துன்புறுத்தல் அளிக்க வேண்டும் என்று பேரவையில் கோடநாடு விவகாரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications