ஆர்எஸ்எஸ் சிறுமை நிறைந்த இயக்கம்.. இந்தியாவில் எந்த பெருமையும் இல்லை.. கே.எஸ்.அழகிரி விமர்சனம்
சென்னை: இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பெருமையும் இல்லை என்றும், அது சிறுமை நிறைந்த இயக்கம் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது கே.எஸ் அழகிரி கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர், காந்தியத்தின் உண்மையான வாரிசு. நாடாளுமன்ற படிக்கட்டுகளில் அவர் நடந்து சென்றபோது இந்திய ஜனநாயகமே வெற்றி பெற்றதற்கான ஆதாரமாக அமைந்தது. அவர் சமூகத்தில் கடை கோடியில் இருக்கின்ற மனிதன். தன்னுடைய உழைப்பால், தியாகத்தால் தன்னையும் வளர்த்துக் கொண்டு, இந்த தேசத்தின் வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் காமராஜர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 9 ஆண்டுகளாகவும், 2 பிரதமர்களை உருவாக்கக்கூடிய ஆற்றல் படைத்தவராக ஒரு வேட்டி கட்டிய தமிழர் இருந்தார் என்று சொன்னால், அது தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்ற மதிப்பு. வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மனிதர் காமராஜர். சமூக நீதிக்கு இலக்கணமாக இருந்தவர் காமராஜர். இட ஒதுக்கீடு தந்தையாகவும் காமராஜர் திகழ்கிறார்.
ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது என்றும், நேருவே அழிக்க நினைத்தும் அழிக்க முடியவில்லை என்று கூறிய எல்.முருகனின் கருத்துக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, வரலாறு தெரியாதவர்கள் பேசும் பேச்சுதான் எல்.முருகன் பேசியது. ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பெருமையும் இல்லை. அது சிறுமை நிறைந்த இயக்கம். தேசத்தின் விடுதலையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியை தொடர வேண்டும் என்று கூறியவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்.கார்கள்.
ஐஏஎஸ் அதிகாரியை, கே.எஸ்.அழகிரி உறவினர்கள் மிரட்டுவது போல் ஊடகங்களில் செய்திகள் வருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ். அழகிரி, யாரு தவறு செய்தாலும் தண்டனை கிடைக்கும் என கூறினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications