• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மு.க.ஸ்டாலினுக்கு.. ரஜினி ஸ்கெட்ச் போட வாய்ப்பிருக்கா.. ஆனால் கள நிலவரம் வேற மாதிரி இருக்கே

|

சென்னை: திமுகவுக்கும் ரஜினிக்கும்தான் நேரடி போட்டி என்று பரவலான கருத்து இருந்தாலும், நிஜ கள நிலவரம் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எங்கே, எப்படி இது ஆரம்பமானது என்று தெரியவில்லை.. ரஜினி Vs திமுக என்ற நிலை உருவாகி உள்ளது.. அன்று லீலா பேலஸில் ரஜினி பேசும்போது, ஸ்டாலினுக்கு இது வாழ்வா? சாவா? என்ற நிலைதான், வரும் தேர்தலில் அவர் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று பகிரங்கமாகவே பெயர் சொல்லி தாக்கினார்.

அதேபோல, அதற்கு முன்னதாக முரசொலி விவகாரத்தை சீண்டியதும் ரஜினியேதான்.. பெரியார் பற்றின கருத்து சொல்லி, அதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் பிடிவாதம் பிடித்து, பழைய அவுட் லுக் பத்திரிகையை மீடியா முன்பு விரித்து காட்டி விளக்கம் சொன்னதும் இதே ரஜினிதான்.

தோற்றம்

தோற்றம்

எப்படி பார்த்தாலும், இந்த சமீப கால நிகழ்வுகளில் ரஜினியே அதிக அளவு திமுகவுடன் காழ்ப்புணர்ச்சியுடன் இருந்ததுபோல ஒரு தோற்றம் உள்ளது.. இது உண்மையா? அல்லது எதிர்பாராமல் நடந்த ஒன்றா என்பது தெரியவில்லை. மற்றொருபுறம், ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதாக செய்திகள் வந்ததில் இருந்தே திமுக அந்த அளவுக்கு ஒரு எதிர்ப்பை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.

 துரைமுருகன்

துரைமுருகன்

பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர்.பாலுவும், நியமனம் செய்யப்பட்ட அன்றைய தினமே போன் போட்டு வாழ்த்து சொன்னது ரஜினிதான்.. இந்த வாழ்த்து செய்தியை மறுநாளே முரசொலியும் வெளியிட்டது. வினாயகர் சதுர்த்திக்கு வாழத்து சொல்லாத ரஜினி, திமுக தலைவர்கள் நியமனத்துக்கு வாழ்த்து சொன்னதுதான் ஆச்சரியத்தை தந்தது. அந்த வகையில் திமுகவும் ரஜினியுடன் சமரச போக்கையே கடைப்பிடித்து வந்ததுபோலவே தெரிகிறது.

அதிமுக

அதிமுக

இந்நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லி உள்ள நிலையில், திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் ரஜினி இல்லை என்று தமிழருவி மணியன் சொல்லி உள்ளார்.. இது பற்றி ஸ்டாலினிடமே கேட்டுள்ளனர்.. அதற்கு ஸ்டாலின், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லாருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அவர் கட்சி துவங்கட்டும்.. கொள்கைகளை அறிவிக்கட்டும்.. அதுபற்றி, என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.. தமிழருவி மணியனை, தவறாக அருகில் வைத்து விட்டோமோ என, ரஜினி சொன்னதாக தான், எனக்கு தகவல் வந்தது'' என்றார். அதாவது ரஜினியை நம்பும் அளவுக்கு, தமிழருவி மணியனை ஸ்டாலின் நம்பவில்லை என்பதன் அர்த்தமே இது!

முரசொலி

முரசொலி

கடந்த 2018-ல் முரசொலியில் ரஜினியை விமர்சித்து ஒரு கட்டுரை வெளிவந்ததற்கு "நான் ஆக்கபூர்வமான அரசியல் செய்யணும்னு இருக்கேன்.... யாரையும் திட்டுவதோ விமர்சனம் செய்வதோ என் நோக்கம் இல்லை.. கலைஞர் படத்திறப்பு விழாவில் கூட நான் கலந்துக்கிட்டேனே.. அப்படி இருக்கும்போது திமுக ஏன் என்னை சீண்டுது' என்று ரஜினி வருத்தப்பட்டாராம்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஸ்டாலின், சபரீசனை அழைத்து, ரஜினியிடம் பேச சொன்னதாகவும் ஒரு தகவல் கசிந்தது. மேலும், முரசொலியில் ரஜினி குறித்த செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அதுமட்டுமல்ல... கடந்த வருடம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் திமுகவில் இணைந்தபோதுகூட, அவருக்கு கிருஷ்ணகிரி தொகுதி எம்பி தேர்தலில் சீட் தருவதாக செய்தி வெளியானது.. கிட்டத்தட்ட திமுகவும் சீட் தருவதற்கு சம்மதித்துவிட்ட நிலையில், ரஜினி ஸ்டாலினுக்கு போன் செய்தாராம்.. எங்க மாவட்ட செயலாளருக்கு சீட் கொடுத்தீங்கன்னா, அது தவறான முன்னுதாரணம் ஆயிடுமே என்று சொல்லவும்தான், கிருஷ்ணகிரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கினாராம் ஸ்டாலின்.

 தகவல்

தகவல்

இப்படி ரஜினி - ஸ்டாலின் குறித்து எத்தனையோ பேச்சுக்கள், கருத்துக்கள், விமர்சனங்கள், ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன... இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. அதேசமயம், இப்படி வெளியாகிவரும் தகவலுக்கும், இவர்களின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.. இவர்கள் இருவரிடையே ஒரு நல்ல புரிதல் உள்ளது என்பதற்கு உதாரணங்கள்தான் இவை. பழிக்கு பழி, எதிரிக்கு எதிரி என்ற சராசரி அரசியலையும் தாண்டி, இருவரிடையே ஒரு இணக்கமும் - நல்ல நெருக்கமும் இழையோடிவருவது என்பதும், நாகரீக அரசியலை அடுத்த கட்டத்துக்கு இவர்கள் இருவரும் கொண்டு செல்வது போலவும் தென்படுவது மகிழ்ச்சியை தந்து வருகிறது.

 
 
 
English summary
There is Political Culture and Friendship Between MK Stalin and Rajinikanth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X