கலைஞர் உரிமை தொகை விரிவாக்கம்.. என்ன செய்தாலும்.. இந்த 2 தரப்பினருக்கு ரூ.1000 கிடைக்காது.. தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 15 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இரண்டு குறிப்பிட்ட பிரிவினருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil Nadu Government Notification ration magalir urimai thogai

மகளிர் உரிமைத் தொகை யாருக்குக் கிடைக்காது?

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், மேலும் 10 முதல் 15 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1.45 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை முதல் வாரத்தில் இதற்கான முகாம்கள் விண்ணப்பப் பணிகள் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் விண்ணப்பங்கள் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், சிலருக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வார்டு உறுப்பினர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். ஆனால், மற்ற அதிகாரப் பதவிகளான கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நகராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மேயர்களின் மனைவிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட மாட்டாது.

இரண்டாவதாக, அரசு மற்றும் கார்ப்பரேஷன் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், ரூ.3,000 பென்ஷன் போன்ற குறைந்த பென்ஷன் பெற்றாலும், அவர்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படாது. கலைஞர் உரிமைத் தொகை விரிவாக்கம் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த இரண்டு பிரிவினருக்கும் ரூ.1,000 கண்டிப்பாக வழங்கப்படாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை - முக்கிய அறிவிப்பு

குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். ஒரு வீட்டில் தந்தை மற்றும் திருமணமாகாத இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் தாய் உயிருடன் இல்லை என்றால், 21 வயது நிரம்பிய மூத்த பெண்ணுக்கு இந்தத் தொகை வழங்கப்படும். அவர் குடும்பத் தலைவி இல்லையென்றாலும், மகளிர் உரிமைத் தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்கள் தகுதியானவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம், ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விவாகரத்து பெற்ற பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு வைத்திருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இந்த உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த பணம் கிடைக்கும். இரண்டாவது பெண்ணுக்கு பணம் தரப்பட மாட்டாது. இதற்காக இரண்டாவது பெண் தனியாக ரேஷன் கார்டு வாங்கினாலும் பணம் கிடைக்காது. ஏனெனில், ஒரே வீட்டில் இருந்தால் சோதனையின்போது பணம் தரக்கூடாது என்று முடிவு எடுக்கப்படும். கள ஆய்வில் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகள் இருந்தால், அதில் இரண்டாவது ரேஷன் கார்டு நீக்கப்படும்.

அரசு பென்ஷன் பெறுபவர்களுக்கு கண்டிப்பாக பணம் கிடைக்காது. அரசின் வேறு வகையான வருமானம் பெற்றாலும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. அரசு ஊழியர் அல்லாத கணவர்களின் மனைவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். அவர்களுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசு ஊழியர் அல்லாதவர்களாக இருந்தால், அவர்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கம் ஜூலை 15 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். அரசு விதித்துள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு இந்தத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+