• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

டிட்டோ.. அப்படியே "குட்டி வைகோ"வாக உருமாறிய கமல்.. பதைபதைக்கும் திராவிட கட்சிகள்.. திகைப்பில் மக்கள்

|

சென்னை: ஒரு குட்டி வைகோவாகவே உருமாறி விட்டார் கமல்.. மதிமுகவுக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.. ஆனால், ஜூனியர் வைகோ கமலின் ராஜதந்திரம் வியக்க வைத்து வருகிறது.

ஒரு சின்ன பிளாஷ் பேக்:

2014-ல் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க கலைஞர் விரும்பினார்.. ஆனால் அது நடக்கவில்லை.. அதனால், 2016 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க விரும்பினார்... ஆனால், ஏனோ விஜயகாந்த் விலகி விலகி சென்றார்.. கலைஞரின் உள்மனசு ஆசை தெரிந்தும், பிடிகொடுக்கவே இல்லை.

முரண்பிடிக்கும் தேமுதிக-' ராஜ்யசபா சீட்' மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழுமுரண்பிடிக்கும் தேமுதிக-' ராஜ்யசபா சீட்' மூக்கனாங் கயிறுடன் விஜயகாந்த் வீட்டுக்கு போகும் அதிமுக குழு

 துணிச்சல்

துணிச்சல்

இந்த சமயத்தில்தான், தனித்து போட்டி என்ற ஒரு படுதுணிச்சலான முடிவை ஜெயலலிதா எடுத்தார்... அப்போது திமுக, அதிமுகவுக்கு போட்டியாக மாற்று அரசியலை முன்வைக்க, மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருந்தது, இப்படி ஒரு கூட்டணி இதற்கு முன்பு எப்போதும் வலுவாக இருந்ததில்லை.. மதிமுக, இடதுசாரிகள், விசிக, தமாகா போன்ற கட்சிகளுடன்தான் அந்த அணி ஆரம்பமானது.. கடைசி நேரத்தில் வந்து ஜாயிண்ட் ஆனார் விஜயகாந்த்.. ஆனால், முதல்வர் வேட்பாளர் விவகாரம் வெடித்தது..

விஜயகாந்த்

விஜயகாந்த்

கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று வைகோ சொன்ன நிலையில், வேறு வழியில்லாமல், நிர்பந்தத்தால் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.. இறுதியில் திமுக படுதோல்வியை சந்தித்தது.. இதற்கு காரணமாக இருந்தது மக்கள் நலக்கூட்டணி.. இந்த கூட்டணிக்கு விதையாக இருந்தது வைகோ.. இது ஏதோ தேர்தல் கால சம்பவம் மட்டும் என்று எடுத்து கொள்ள முடியாது.. ஒரு வரலாற்று நிகழ்வும்கூட.

மவுசு

மவுசு

3வது அணி என்றாலே, அது கொஞ்சம் மவுசுதான் என்ற பிம்பத்தை தந்தது இந்த கூட்டணியால்தான்.. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒருவேளை தமிழகத்தின் நிறம் புதிதாக மாற போகிறதோ என்ற ஆர்வத்தில் மக்கள் இந்த கூட்டணிக்கு வரவேற்பை தந்தார்கள்.. கிட்டத்தட்ட அப்படித்தான் இன்று ஒருநிலைமை உருவாகி உள்ளது.

 திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள் மேல் அதே சலிப்பு.. அதே ஊழல் புகார்கள்... அதே நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்.. என மக்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.. இந்த சமயத்தில்தான் நாங்கள் மாற்று என்று களம் இறங்கினார் கமல்.. யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன்தான் கூட்டணி என்று சொல்லி கொண்டே இருந்தார்.. இப்போதும் அதே உறுதியில் இருக்கிறார்.. கடந்த முறை எம்பி தேர்தலில் கமலுடன் யாருமே கூட்டணி வைக்க முன்வரவில்லை.. தினகரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார்கள்.. ஆனால் அவர் தனியாகவே போட்டியிட்டார்.

 தனித்து களம்

தனித்து களம்

எனினும் கமலுடன் கூட்டணியில் சேர ஆர்வம் காட்டாததற்கு ஒரே ஒரு பிரச்சனைதான்.. அது முதல்வர் வேட்பாளர் என்ற ஆசைதான்.. கமலுக்கும் முதல்வர் பதவி மீது ஆசை உள்ளது.. அன்புமணிக்கும் முதல்வர் ஆசை உள்ளது.. விஜயகாந்த்துக்கும் முதல்வர் ஆசை உள்ளது.. சீமானுக்கும் ஆசை உள்ளது.. ஸ்டாலினுக்கும் உள்ளது.. ரஜினிக்கும் இருந்தது.. தினகரனுக்கும் இருந்தது.. இதனாலேயே கமல் தனித்து விடப்பட்டார்.. தனித்து களம் கண்டார்.

 திமுக

திமுக

இப்போது நிலைமை அப்படி இல்லை.. கமலை கூட்டணியில் இணைக்க திமுக முயன்று முயன்று தோற்றாலும், கமல் பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார்.. இதற்கு காரணம், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை தடுத்து நிறுத்தினால், தன் தரப்பு வாக்குகள் கூடும்.. அதன்மூலம் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து, அல்லது சட்டமன்றத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் உள்ளே நுழைவது என்ற பிளானில் உள்ளார்.

 திமுக

திமுக

இதற்கு பிறகு சின்ன சின்ன கட்சிகளுடன் பேச்சை தொடங்கினார்.. ஆம் ஆத்மி மட்டும் கமலுடன் துணைக்கு உள்ளது.. மற்றபடி சிங்கிளாக நின்று கெத்து காட்டவும், ஒவ்வொரு அதிருப்தி கட்சிகளின் பார்வையும் கமலை நோக்கி திரும்ப தொடங்கி உள்ளது.. இப்போதைக்கு அதிமுகவுடன் தேமுதிக பிரச்சனையில் உள்ளது.. ஒருவேளை அந்த கட்சி கமலுடன் வருமா தெரியாது. அதேபோல, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பிரச்சனையில் உள்ளது.. காங்கிரஸ் கமலுடன் வருவதற்கு நிறையவே சாத்திய கூறுகள் உள்ளன..

 சரத்குமார்

சரத்குமார்

கமலை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார் என்று சரத்குமார் முதல் பந்தை வீசியுள்ளார்.. இப்போது பொன்ராஜ், இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது.. இனி அடுத்தடுத்து பல கட்சிகள் கமல் தலைமையில் ஒன்றிணைவார்கள் என்றும் தெரிகிறது.. அன்று வைகோ எடுத்த நிலைப்பாட்டை இன்று கமல் எடுத்துள்ளார்.. மக்களுடன்தான் கூட்டடணி என்று கமல் சொன்னார், உண்மையிலேயே கட்சிகளை ஒருங்கிணைத்து இன்னொரு மக்கள் நலகூட்டணி தயாராகி வருகிறது.. 2016-ஐ கமல் வீழ்த்துவாரா? பார்ப்போம்..!

 
 
 
English summary
Third Front is formed under the leadership of Kamalhasan, like Vaiko
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X