”திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது” சிலர் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.. ஆளுநர் ஆர்.என். ரவி!
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், திருக்குறள் பற்றி தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பல்வேறு கருத்துக்களை பேசியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திருக்குறள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்என் ரவி பேசுகையில், திருக்குறள் ஆன்மிகத்தை கற்பிக்கிறது.
திருக்குறள் ஆகச்சிறந்த படைப்பு. ஆன்மிகமும், ஆழ்ந்த சிந்தனைகளையும் கொண்ட புத்தகம். அது நமது பாரத நாட்டின் பெருமை கொண்ட ஒன்று. ஒரு மனிதன் எப்படி இருக்க இருக்க வேண்டும் என்று கூறும் ஒரு நூல் தான் திருக்குறள்.

ஆன்மிகத்தை கற்பிக்கிறது
அதுமட்டுமல்லாமல் ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. ஆனால் இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை.

திருக்குறளில் அரசியல்
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனை ஜி.யு.போப் தவறாக மாற்றி மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் அடையாளம்
திருவள்ளுவரால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை. திருவள்ளுவரின் புத்தகங்களை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. தமிழ் புத்தகங்கள் பல மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டதால் எளிதாக தமிழ் கற்றுக்கொள்ள முடிகிறது. இருப்பினும், திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஏனென்றால் திருக்குறள் இந்தியாவின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

ஜி.யூ.போப் சர்ச்சை
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், திருக்குறளை வாழ்வியல் நெறிகள் மட்டும் என்பது போல் இப்போது குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் அதில் ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் ஆதிபகவன் என்பதை வெறும் முதன்மைக் கடவுள் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications