சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோட்டத்திற்கு கூப்பிட்டார்.. சாப்பாடு போட்டு இங்க வந்துடுன்னார்.. நான் போகலை.. திருமாவளவன்

டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டுகளுக்கு திருமாவளவன் பதிலடி தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தைலாபுரம் தோட்டத்தில் வைத்து ராமதாஸ் எனக்கு அழைப்பு விடுத்தார்-திருமாவளவன்- வீடியோ

    சென்னை: "தைலாபுரம் தோட்டத்திற்கு கூப்பிட்டார்... போனேன்.. வாழையிலை விரித்து சாப்பாடு போட்டார்.. திமுக ஒரு துரோக கட்சி.. அழிந்துவிடும்.. வெளியே வந்துடு என்றார்.. ஆனால் நான் போகலை" என்று டாக்டர் ராமதாஸ் குறித்து புது தகவலை வெளியிட்டுள்ளார் திருமாவளவன்!

    சிதம்பரம் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    அதில், திருமாவளவனை தலைவராக்கியதே நான்தான்.. நல்வழிப்படுத்த முயற்சி செய்தேன்.. ஆனால் கேட்கவில்லை.. அவரது தொண்டர்களை வேறு மாதிரி தயார்படுத்தியிருந்தார்.. அவர் மாறவே இல்லை" என்று கூறியிருந்தார்.

    என் கிட்ட ஜாதி இருக்கு.. உன் கிட்ட பணம் இருக்கு.. டீல் பேசிக்கலாமா.. கல்லா கட்டும் சிறு கட்சிகள்என் கிட்ட ஜாதி இருக்கு.. உன் கிட்ட பணம் இருக்கு.. டீல் பேசிக்கலாமா.. கல்லா கட்டும் சிறு கட்சிகள்

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், ராமதாசின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தும், மேலும் சில தகவல்களையும் சொன்னார்.

    துரோக கட்சி

    துரோக கட்சி

    அப்போது அவர் சொல்லும்போது, "டாக்டர் ராமதாஸ் என்னை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்தார். வாழை இலையில் சாப்பாடு பரிமாறினார். அப்போது, 'திமுக ஒரு துரோக கட்சி. அது அழிந்து போகக் கூடியது. அதனால் அங்கிருந்து வெளியே வந்துவிடு' என்று என்னை வற்புறுத்தினார்.

    யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

    வீண் பழி

    வீண் பழி

    ஆனால் நான் அதை உதாசீனப்படுத்தினேன். அன்னையில இருந்து என் மேல சேற்றை வாரி இறைக்கிறதும், வீண் பழி போடறதுமே அவர் வேலை. ஆனால் நான் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் திறந்த புத்தகமாக இருக்கிறேன். நான் சொல்றது எதுவும் பொய் கிடையாது. வேண்டுமானால் ஒரே மேடையில் ராமதாசை சந்திக்கவும் நான் தயார்.

    பணம் கிடைக்காது

    பணம் கிடைக்காது

    திமுகவில் சீட்டு மட்டுமே கிடைக்கும்.. ஆனா நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி பாமக கூட்டணி அமைத்துள்ளது. உண்மையை சொல்ல போனால், அதிமுக - பாமக கூட்டணிதான் வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும் வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது" என்றார்.

    மாறி மாறி உண்மை

    மாறி மாறி உண்மை

    பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதாலோ என்னவோ, இப்படி புதைந்து போன உண்மைகளை எல்லாம் மாறி மாறி ஆளாளுக்கு பேசி வருவதை, தமிழக மக்கள் உறைந்துபோய் கவனித்தே வருகிறார்கள்!

    English summary
    VCK Leader Thirumavalavan has replied to PMK Founder Dr Ramadoss's allegations in Chidambaram Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X