Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 பேர் விடுதலையில் தக்க பாடம்.. ராஜினாமா பண்ணுங்க! ஆளுநர் ரவி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், "இந்த விடுதலை காலம் தாழ்ந்த விடுதலை என்றாலும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் நீண்ட கால ஏக்கம் தணிகிறது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அதேபோல ஆளுநர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஆளுநரின் கால தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் திருமாவளவன் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

பின்னணி

பின்னணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாடு வந்திருந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து தமிழ்நாடு அரசு இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார்.

நன்னடத்தை

நன்னடத்தை

இந்நிலையில் கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக அறிவித்தது. இந்த தீர்ப்பு பலராலும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மற்ற 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்கள் சிறையில் இருக்கையில் நடந்துகொண்ட விதம் குறித்து விரிவாக ஆராய்ந்தது. இவர்களின் நன்னடத்தையில் எந்த பிரச்னையும் இல்லாததை நீதிபதிகள் கவனத்தில் கொண்டுள்ளனர். இதில் ரவிச்சந்திரன் சிறையில் தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துள்ளார்.

விடுதலை

விடுதலை

அதேபோல மற்றவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டபோதும் எவ்வித பிரச்னையும் இவர்கள் செய்யவில்லை. மேலும், சிறையில் இருந்தபடியே உயர்கல்வி மற்றும் இலக்கியத்தில் நாட்டம் கொண்டு கவிதைகளையும் எழுதியுள்ளனர் இதையனைத்தையும் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், இவர்களது நன்னடத்தையில் எவ்வித பிரச்னையும் இல்லாத நிலையில் இவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வியெழுப்பியிருந்தது. மட்டுமல்லாது இவர்களின் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு இயற்றிய அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் காலம் தாழ்த்தியதை "மித மிஞ்சிய தாமதம்" என்று குறிப்பிட்டு ஆறு பேரையும் விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டது.

பதவி விலக வேண்டும்

பதவி விலக வேண்டும்

இந்நிலையில், இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித் கூறுகையில், "ஆறு பேர் விடுதலை ஆறுதல் அளிக்கிறது. மிகவும் காலம் தாழ்ந்த விடுதலை எனினும் நீண்டகால ஏக்கம் தணிக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஓயாத போராட்டத்திற்குக் கிடைத்த உன்னத வெற்றி. தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு. ஆளுநர் பதவி விலகுவதே சரியாகும்." என்று கூறியுள்ளார். ஏற்கெனவே ஆளுநர் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் ஆறு பேர் விடுதலை விவகாரத்திலும் ஆளுநருக்கு எதிராக குரல் எழுந்துள்ளது மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+