''முஸ்லிம்கள் மீது குறி! பொது சிவில் சட்டம்! சங்பரிவாரின் சதியை முறியடிப்போம்''! திருமாவளவன் அழைப்பு
சென்னை: பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி பாஜக அரசியல் ஆதாயம் அடைய முற்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர் விரிவான ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதன் விவரத்தை இங்கே பார்க்கலாம்.
''இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக அரசின் பெரும்பான்மைவாத நோக்கத்தை நிறைவேற்றும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சட்ட அமைச்சகம் தனது சுயேச்சைத் தன்மையை இழந்து விட்டதா? என்ற கேள்வியைத்தான் இந்த அறிவிப்பு எழுப்புகிறது.''

''ஏற்கனவே சீக்கிய மதத்தினரும், பௌத்த மதத்தினரும் தங்களுக்குத் தனியே குடும்ப சட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தங்களை இந்து குடும்ப சட்டத்துக்குள் உள்ளடக்கியிருப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமயத்தினருக்கு இருக்கும் குடும்ப சட்டங்களையும் ஒழித்துக்கட்ட மோடி அரசு முற்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் இந்து ராஷ்டிரம் எனப்படும் 'சனாதன ராஷ்ட்ரக்' கனவின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்கிற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. ''
''அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்து விட்ட பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சனைகளை எழுப்புகிறது. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி என சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சிகளிலேயே மிகவும் மோசமான ஆட்சி இந்த பாஜக ஆட்சிதான் என்ற விமர்சனத்தை மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. ''
''முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை மதத்தவராக இருக்கும் இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பாஜக மனப்பால் குடிக்கிறது. இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் பட்டியல் சமூகத்தினரும் பழங்குடி மக்களும் இந்த ஆட்சியாளர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். ''
''2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப் பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பாஜக- சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.''
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications