கடுமையான வேலை.. ஆனால் பணி நிரந்தரம் இல்லை! கௌரவ விரிவுரையாளர்கள் குறித்து திருமாவளவன் கோரிக்கை
சென்னை: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இவ்வாறு கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்களின் சான்றிதழ்கள் ஏற்கெனவே சரிபார்த்து முடித்துவிட்ட நிலையில் அவர்களை விரைவில் நிரந்தரமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கௌரவ விரிவுரையாளர்களின் நிலை
தமிழ்நாட்டில் 173 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 7 கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால் இக்கல்லூரிகள் அனைத்தும் 'guest lecture' எனப்படும் கௌரவ விரிவுரையாளர்களை நம்பியே இயங்கி வருகின்றன. அதாவது முழுமையாக 30% சதவிகிதம் கூட இக்கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியர்கள் கிடையாது. இவ்வாறு இருக்கையில் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரத்திற்காக கடுமையாக சுரண்டப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. எனவே உடனடியாக இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் பல கோரிக்கை விடுத்துள்ளன.

கடிதம்
இதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அவருக்கு இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் எழுதியுள்ள கடிதத்தையும் பகிர்ந்திருக்கிறார். கடிதத்தில், "அரசு கலைக்கல்லூரிகளில் நாங்கள் கௌரவ விரிவுரையாளர்களாக பணி செய்து வருகிறோம். எங்களது கோரிக்கைகள் பல ஆண்டுகளாக அரசிடம் முன் வைக்கப்பட்டு வருகிறது. கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வித்துறையின் கடைநிலை ஊழியர்கள். எங்களின் கல்வித்தகுதி பேராசிரியர் பணிக்கு இணையானது.

ஊதியம்
ஆனால் நாங்கள் பெறும் ஊதியம் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை விட குறைவானது. எங்கள் பணி தற்காலிகம்தான் என்றாலும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பெரும் வளர்ச்சிக்கு துணையாகவும், தூணாகவும் இருப்பது நாங்கள்தான். எங்களது வரலாறு 1995 முதல் தொடங்குகிறது. எங்களுக்கான ஊதியம் 1995-இல் ரூ.2,000/- 1998-இல் ரூ.3,200/-2000-இல் ரூ.4,000/-(5முதல் 8மாதம் வரை வழங்கப்பட்டது) 2009-இல் ரூ.6000/- 2011இல் ரூ.10,000/-(8முதல் 10 மாதம் வரை வழங்கப்பட்டது) இருந்து 2016-இல் ரூ.15,000/- 2021 ஆம் ஆண்டு முதல் ரூ.20,000/- பெறப்பட்டு வருகிறோம்.

பணி நிரந்தரம்
தற்போது 12மாதங்கள் பணி செய்தாலும் 11மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது . நாங்கள் பெறும் ஊதியம் நிரந்தரப் பேராசிரியர்களின் ஊதியத்தைக் காட்டிலும் 10 மடங்கு குறைவானதாகும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையிலும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எங்களது பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில் 2006 முதல் 2021 வரை திமுக தேர்தல் அறிக்கையில் எங்களது பணி நிரந்தரக் கோரிக்கை இடம்பெற்றன.

வாக்குறுதி
ஆட்சி மாறி, மாறி அமைந்த போதிலும் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம். அதன் விளைவாக 2010-இல் திமுக ஆட்சியின் போது கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உத்தரவாதம் அளித்தார். அறிவுறுத்தலின்படி முதன்மைச் செயலாளராக இருந்த கணேசன்,IAS அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவில் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். எனவே உடனடியாக எங்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான முடிவெடுக்க அரசுக்கு வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications