3வது அணியா.. தமிழ்நாட்டில் எப்போதுமே இருதுருவ போட்டிதான்.. அடித்து சொன்ன திருமாவளவன்
3வது அணி அமைந்தாலும், இருதுருவ போட்டிதான் நடக்கும் என திருமா கூறினார்
சென்னை: 3-வது அணி உருவானாலும் தமிழ்நாட்டில் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:

"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை... பாஜகவின் தலையீடு நிறைய இருக்கிறது.. இதை அவர்கள் தேர்தலை அறிவித்ததில் இருந்தே அறியமுடிகிறது. மேற்குவங்கத்தில் தமிழகத்தை விட 60 சட்டசபை தொகுதிகள் தான் அதிகம்... ஆனால் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த போகிறார்கள்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு என்பது தேர்தலுக்கு நடத்தப்பட்ட நாடகமாகத்தான் தெரிகிறது... ஏனென்றால், இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகுதான் சட்டமாகும்.. இனி ஆளுநர் கையெழுத்திடுவாரா என்பது தெரியவில்லை இதேபோல கடன் தள்ளுபடி அறிவிப்பும், தேர்தல் நாடகமாகவே தான் இருக்கிறது..
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரபூர்வமாக நம்மால் அறிய முடியும்... அதற்காகத்தான் அந்த கணக்கெடுப்பை வலியுறுத்துகிறோம்.
3வது அணி அமைவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.. ஒவ்வொரு தேர்தலிலும் 3-வது அணி உருவாகத்தான் செய்யும்.. ஆனால் எப்போதுமே இருதுருவ போட்டிதான் இருக்கும்... அதுபோலதான் இந்த முறையும்.." என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications