“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் போட்டியிட இருந்தார். ஆனால், இது குறித்து ஏராளமான விவாதங்கள் எழுந்த நிலையில், தற்போது போட்டியிடவில்லை என்று அறிவித்திருக்கிறார். மட்டுமல்லாது இதற்கான காரணத்தையும் விளக்கியிருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் பேசியதாவது, "நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னதும், உடனே என்னென்னவோ வதந்திகள் கிளம்பின.

திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை கோருகிறார். அப்படியிருப்பவர், இந்த முறை தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம்தான் அமையும் என்பதை கணித்திருக்கிறார் எனவும், எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, துணை முதலமைச்சர் பதவியை வாங்க ஆசைப்படுகிறார் என்றும் வதந்திகள் கிளம்பியிருக்கின்றன. எனக்கு அப்படியான எந்த ஆசையும் இல்லை. இந்த தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை நான் வலியுறுத்தவில்லை.
காரணம், இந்த டிமாண்ட் கூட்டணிக்குள் குழப்பதை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நினைத்திருந்தேன். எனவேதான் இதை இந்த தேர்தலில் நான் இந்த டிமாண்டை முன் வைக்கவில்லை. அப்படி இருக்கும் எனக்கு, எப்படி துணை முதல்வர் பதவி குறித்த ஆசை வந்திருக்கும்? பதவி மீது ஆசை இருந்தால், நான் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தபோது எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?
எனவே என்னுடைய நகர்வை கொச்சைப்படுத்திய காரணத்தினால், நான் போட்டியிடவில்லை. நான் போட்டியிட இருந்த காட்டுமன்னார் கோவில் தொகுதியில், மறைந்த இளையபெருமாள் ஐயாவின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார். யுத்தத்தில் பின்வாங்குவதும் ராஜதந்திரம்தான். அவதூறுகளை முறியடிக்க இந்த முடிவை எடுக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications