வைகோ எங்கே?.. அங்க பேரையே காணோமே.. "தகித்த" மதிமுக.. பின்னாடியே வந்து "கூல்" செய்த திருமாவளவன்.. செம
வைகோவின் பங்கு மகத்தானது என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டி உள்ளார்
சென்னை: இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று விவாதப் பொருளான நிலையில், அந்த விவகாரத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனியார் டிவி ஒன்றுக்கு விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.. அதில், பிரபாகரன் தம்மை இலங்கைக்கு அழைத்தது பற்றி விவரித்திருந்தார்..
குறிப்பாக, அந்த பேட்டியில் வைகோவை, பிரபாகரன் அழைக்கவில்லை போன்று திருமாவளவன் சொல்லிவிட்டதாக மதிமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர்..

மதிமுக வருத்தம்
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை மதிமுகவும் வெளியிட்டது.. அதில், திருமா மீது வைகோ வருத்தம் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்ற தலைவர்கள் ஈழத்துப் பிரச்சனையில் அரசியல் செய்ததாக திருமா சொல்வது வருத்தமளிக்கிறது என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் தி.மு. ராசேந்திரன் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.. "தனியார் தொலைக்காட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது.

வைகோ காணோமே
இந்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. ஈழத் தமிழ் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் வைகோ என்பதை பூமிப்பந்தில் வாழும் பத்து கோடித் தமிழர்களும் நன்கு அறிவார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981ம் ஆண்டிலிருந்து வீரமுழக்கமிட்டவர் வைகோ.

வைகோ எங்கே
வைகோ, அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை எட்டு முறை சந்தித்து சிங்கள அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட வேண்டாம்; ஆயுத உதவிகள் அளிக்க வேண்டாம் எனக் கோரினார். ஆனால் இந்தியா போரை நிறுத்த முயற்சிக்கவில்லை. போர் முடிந்ததும் எங்களுக்காக இந்தப் போரை இந்தியாதான் நடத்தியது என்றார் ராஜபக்சே. அந்தக் காலகட்டத்தில் அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் வைகோ. இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு வைகோ மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்?

தா பாண்டியன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலைவர் வைகோ மீது அளவு கடந்த பாசமும் நேசமும் கொண்டிருந்தவர் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை விமர்சனம் செய்தார் என்று திருமாவளவன் குறிப்பிடுகின்ற காலகட்டத்தில் வைகோ, பழ.நெடுமாறன், டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள்தான் ஈழப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சி நெறியாளர் வைகோ பெயரைக் குறிப்பிட்டு கேட்டபோதும் திருமா அதை கடந்து போனது வருத்தம் அளிக்கிறது" என்று வேதனையுடன் கூறியிருந்தார்..

முணுமுணுப்புகள்
ஏற்கனவே திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் வெடித்து வரும் நிலையில், இந்த விவகாரமும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது.. திருமா மீது மதிமுகவினர் வருத்தத்தில் உள்ளதாகவும் கருத்துக்கள் குவிய தொடங்கின.. ஆனால், இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து, இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோவின் பங்கு குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.. நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மதிமுக வெளியிட்ட அதிருப்தி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஐயா நெடுமாறன்
அதற்கு திருமாவளவன், இலங்கை தமிழர் விவகாரத்தில் மதிமுகவின் பங்கு மகத்தானது.. அதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்களின் வலிமைக்கு ஏற்ப ஈழத்தமிழர் பிரச்சினைகளில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பல்வேறு தலைவர்களும் அவர்களது திறனுக்கு ஏற்ப தங்களது எதிர்ப்புகளை வெளிக்காட்டி வந்தனர்.. ஐயா நெடுமாறன், பல்வேறு பிரிவுகளாக இருக்கின்ற திராவிட கழகங்களின் தலைவர்கள் உட்பட அவரவர் பங்குக்கு அவரவர் வலிமைக்கு ஏற்ப உதவி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்... இதன்மூலம், மதிமுக தரப்பு சமாதானமானதுடன், 2 நாட்களாக நிலவிவந்த முணுமுணுப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
சிபிஎம் அவசர செயற்குழு.. திடீரென என்ட்ரி கொடுத்த வைகோ.. திமுக கூட்டணியில் பரபரப்பு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா










Click it and Unblock the Notifications