அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு தவெகவில் சீட்.. கருத்து சொல்ல எதுவும் இல்லை.. சைலண்டான திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைமையிலான கூட்டணி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் உண்டு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தவெகவுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக கூறிய திருமாவளவன், அதனை பற்றி நாங்கள் கருத்து சொல்ல எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி வேட்பாளராக சத்தியபாமா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு தொகுதிகளிலும் பட்டியலின சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

Thirumavalavan

தனி தொகுதி என்பதால் தவெக வேட்பாளர்களுக்காக திருமாவளவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், புதிதாக உருவாகியுள்ள மதச்சார்பற்றி சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் உண்டு. இது வெற்றிக் கூட்டணி என்று பெயரிட்டுள்ளோம்.

வெற்றியில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கருதுகிறேன். தவெக சார்பாக யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்ற முடிவை எடுக்க முழு சுதந்திரம் இருக்கிறது. அதில் நாங்கள் கருத்து சொல்ல எதுவும் இல்லை. அவர்களை ஆதரிப்பதா, வெற்றிபெற வைப்பதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக விசிக பாடுபடும் என்றார்.

தொடர்ந்து, மிசா காலத்து கொடுமைகளை சந்தித்த முக்கிய தலைவர்களில் ஸ்டாலினும் ஒருவர். அதனை யாரும் மறுக்க இயலாது. வரலாறு மறைக்க முடியாது உண்மை. இதுபற்றி தாம் பேசிய கருத்து யாரையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன் என்று விஜய் கூறியுள்ளார். அதனை விசிகவும் சுட்டிக்காட்டி இருக்கிறது என்றார்.

தொடர்ந்து பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் தொடர்பாக பேசுகையில், பட்டினப்பாக்கம் பகுதி மக்களின் கருத்தை அறிந்து இந்த திட்டத்தை கொண்டு வருவார்கள் என்று கருதுகிறேன். மக்களின் கருத்து என்னவென்று இன்னும் தெரியவில்லை. நிச்சயமாக தமிழக அரசு சரியான முடிவு எடுக்கும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+