"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்!
சென்னை: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு நடந்த கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். "அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள்" என நிதிஷை சுட்டிக்காட்டி திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னையில் நேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "பீகாரில் நிதிஷ் குமாருக்கு மக்களிடையே நல்ல மதிப்பு உண்டு. அவரது கட்சிக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. ஆனால் அவர் பாஜக உடன் என்றைக்கு சேர்ந்தாரோ, அன்று முதல் அவர் மீதான நன்மதிப்பு சரிந்து கொண்டே வந்தது. இப்போது, முதலமைச்சர் பதவியில் இருந்து அவரை ராஜினாமா செய்ய வைக்கக்கூடிய அளவிற்கு நிலைமை போயிருக்கிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது.

நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி மாநிலங்களவைக்கு செல்லக் கூடிய நிலையை பாஜக ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலை அதிமுகவிற்கு வந்துவிடக் கூடாது என்றுதான் தொடக்கத்தில் இருந்தே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் அதிமுகவினர் என்னை கடுமையாக விமர்சித்தனர். பாஜகவை விரைவில் அ.தி.மு.க. புரிந்து கொள்ளும். என்னுடைய கருத்துகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அண்ணன் எடப்பாடியாரே எச்சரிக்கையாக இருங்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த திராவிட இயக்கமான அதிமுகவை கரைய விட்டு விடாதீர்கள், காப்பாற்றுங்கள். தனித்து நின்றாலே அதிமுகவின் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கை கொடுக்கும். ஜெயலலிதா அம்மையார் இல்லாமலேயே 65-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
இதை முன்பே நான் கூறினேன். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் அவரால் அந்த பதவியில் அமர முடியுமா? நிதீஷ் குமாரின் கதி எடப்பாடி பழனிசாமிக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைத்து மொத்தமுள்ள 243 இடங்களில் 202 இடங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதில், 101 இடங்கள் என்ற சமமான எண்ணிக்கையில் பாஜகவும், ஜேடியுவும் போட்டியிட்டிருந்த நிலையில், 89 இடங்களில் பாஜகவும், 85 இடங்களில் ஜேடியுவும் வெற்றி பெற்றன. நிதிஷ் குமார் 10 வது முறையாக பீகார் முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால், 106 நாட்களே முதல்வராக பதவி வகித்த நிலையில் திடீரென பதவி விலகிய அவர் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த சூழலில், நிதிஷ் குமாரின் ராஜினாமாவிற்கு பின்னால் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவிலிருந்து பீகார் முதல்வர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் எனக் கூறியுள்ளார் திருமாவளவன்.
-
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications