ஷாக்.. திருநெல்வேலியில் மெட்ரோ போட சான்ஸ் இல்லை.. மினி மெட்ரோதானாம்.. ஆய்வில் வந்த பரபர முடிவு
சென்னை: திருநெல்வேலி மெட்ரோ ரயில் அமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை பூர்த்தி செய்யவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நடத்திய திட்ட சாத்தியக்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலியில் மெட்ரோ அமைக்கப்படாது. ஆனால் திருநெல்வேலியில் வேறு விதமாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ரோ அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன. முக்கியமாக மாநகராட்சிகளில் மெட்ரோ ரயில்களை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

மதுரை, கோவையில் மெட்ரோ அமைப்பதற்கான முதல் கட்ட ஆய்வுகள் முடிந்துவிட்டன. அங்கே மெட்ரோ அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் முடிந்துவிட்டன. அதேபோல் எந்த ரூட்டில் மெட்ரோ இயக்கப்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.
அதேபோல் எங்கெங்கே ஸ்டேஷன்கள் அமைய வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனால் இங்கே விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கும். அதன்பின் இங்கே கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சேலம்: இது போக சேலம், திருச்சியிலும் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன. இங்கு இப்போதுதான் முதல் கட்ட ஆய்வுகள் முடிந்து உள்ளன. சேலத்தில் 40 கிமீ தொலைவிற்கு, திருச்சியில் 38 கிமீ தொலைவிற்கு மெட்ரோ அமைக்க உள்ளனர். 1.எந்தெந்த ரூட்டில் மெட்ரோ அமைக்கலாம். 2.சாலைக்கு மேலே அமைப்பதா சாலைக்கு உள்ளே அமைப்பதா? 3. இதற்காக இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள், பாலங்கள் எவை. 4.எந்தெந்த இடங்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் 5. பணிகள் தொடங்கினால் போக்குவரத்தை எப்படி மாற்றுவது ஆகிய ஆலோசனை பணிகளை தொடங்கி உள்ளனர்.
திருநெல்வேலி மெட்ரோ: இந்த நிலையில்தான் திருநெல்வேலியில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ, எங்கே அமைப்பது, எந்த ரூட் அமைப்பது உள்ளிட்ட எதுவும் இங்கே முடிவு செய்யப்படவில்லை. முதலில் இங்கே எத்தனை கிலோ மீட்டர் மெட்ரோ அமைப்பது என்று ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின் மெட்ரோவிற்கான மற்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இரண்டு கட்டமாக இந்த முடிவுகள் எடுக்கப்படும்.

இதில் முதல் கட்ட ரிப்போர்ட்டில் திருநெல்வேலி மெட்ரோ ரயில் அமைப்பதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை பூர்த்தி செய்யவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நடத்திய திட்ட சாத்தியக்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலியில் மெட்ரோ அமைக்கப்படாது. ஆனால் திருநெல்வேலியில் வேறு விதமாக ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மினி மெட்ரோ இங்கே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
டெண்டர்: இதற்கான சர்வே ரிப்போர்ட் தயாரிக்க நேற்று டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை அர்பன் மாஸ் டிரான்சிட் கம்பெனி என்ற நிறுவனம் வென்றது. இந்த நிறுவனம்தான் இன்று திருநெல்வேலியில் சர்வே செய்ய உள்ளது. அதாவது மினி மெட்ரோ ரூட்டை எந்த பாதையில் தொடங்க வேண்டும் என்று இவர்கள் சர்வே செய்ய உள்ளனர். விரைவில் திருநெல்வேலி மினிமெட்ரோ தொடர்பான முழு அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த அறிக்கை மூலம் எங்கெங்கே ஸ்டேஷன்கள் வரும் என்ற விவரம் வெளியாகும்.












Click it and Unblock the Notifications