கோவில்தான் உத்தரவை பின்பற்றல! நீதிபதி சுவாமிநாதன் யாரையும் தண்டிக்கலையே! 2 நீதிபதிகள் பளீர்
சென்னை: நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அதன் காரணமாகவே தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுகளை பிறப்பித்தார் என்று மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இரண்டு நீதிபதிகள் அமர்வு இதில், மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஏதும் செய்யவிடாமல் தடுப்பது அல்ல, இரு தரப்பு இணைந்து இணக்கமாக செயல்படுத்த நல்லிணக்கம். இரண்டு தரப்பு மற்ற தரப்பு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற கோவில் நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நீதிபதி சுவாமிநாதன் யாரையும் தண்டிக்கவில்லையே. கோவில் நிர்வாகம் உத்தரவை நிறைவேற்றாத காரணத்தால்தான் நீதிபதி சுவாமி நாதன் CISF படையை அழைத்து செல்ல உத்தரவிட்டார். மற்றபடி நீதிபதி யாரையும் தண்டிக்கும்படி உத்தரவிடவில்லையே , என்று மதுரை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கு தீவிரம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நேற்று பின்பற்றப்படவில்லை. இதற்கு எதிராக உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை நீதிபதி எடுத்தார். முக்கியமாக CISF அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மனுதாரர் தீபதூணுக்கு சென்று விளக்கு ஏற்றலாம், அதிகாரிகள் என்னிடம் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என்று உத்தரவிட்டார்.
தமிழக அரசு மேல்முறையீடு
இந்த உத்தரவுகளுக்கு எதிராக தமிழக அரசு உத்தரவிற்கு மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று தஉயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை செய்து வருகிறது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இதில், தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு அடைந்து என்று உள்ளது தமிழக அரசு பரபரப்பு வாதம் வைத்துள்ளது.
முக்கியமான வாதங்கள்
தமிழக அரசு வாதத்தில், நீதிபதிகள் மாண்புடன் செயல்பட வேண்டும். நீதிபதிகள் சட்ட ஒழுங்கு விவகாரத்தில் தலையிட கூடாது. நீதிபதிகள் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க நினைக்க கூடாது.
எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.
நீதிபதி உத்தரவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல. நேற்று நடந்த மோதல் சம்பவங்களை நீதிபதி சுவாமிநாதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. நாங்கள் பயந்தது போல நடந்துவிட்டது.
இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு மனுதாரர் செயல்பட்டு உள்ளார், அச்சப்பட்டது போலவே இதில் நடந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி அவமதிப்பு வழக்கு தொடுத்துவிட்டது, உடனே அதில் மாற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களிடம் விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். நேற்று எப்படி உடனே மாற்று உத்தரவு பிறப்பித்தார். CISF படையுடன் செல்ல எப்படி உத்தரவு பிறப்பித்தார், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications