அடிதூள்.. "திருவாலங்காடு" ரயில்வே கேட் பாத்தீங்களா.. துள்ளி குதிக்கும் திருவள்ளூர்.. காரணம் தெரியுமா
சென்னை: திருவள்ளூர் மாவட்டமே திக்குமுக்காடி போயுள்ளது.. நீண்ட காலமாக வைத்திருந்த ஒரு கோரிக்கை நிறைவேற போகிறதாம்.. என்ன அது?
திருவாலங்காடு உயர்மட்ட பாலம் வழியாக 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவாலங்காடு ரயில் நிலையம், பி.டிஓ, அலுவலகம் சென்று வருவதுடன், காஞ்சிபுரம், திருவள்ளூர் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
முக்கிய வழித்தடம்: அதனால், இந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் என ஒரு நாளைக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த ரயில் வழித்தடத்தில் புறநகர் ரயில், விரைவு ரயில், சரக்கு ரயில் உட்பட 380 ரயில்கள் தினசரி சென்று வருகின்றன.

அந்த அளவுக்கு திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் மிக முக்கியமான வழித்தடமாக அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விடுகிறது... 380 முறை ரயில்கள் சென்றுவருவதால், 100 முறைக்கும் மேல், ரயில்வே கேட்டுகள் மூடப்பட வேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.
ரயில்வே கேட்: ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், ரயில்வே கேட்டும் மூடப்பட்டுவிடுவதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள்கூட செல்ல முடிவதில்லை... மாற்று வழியும் இல்லாத காரணத்தினால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ரொம்ப அவசரமான பணி என்றால், ரயில்வே கேட்டுக்குள்ளேயே புகுந்து செல்கிறார்களாம்.. இதனால் சில சமயம் விபத்துக்களையும் சந்திக்க நேர்ந்துவிடுகிறது.
எனவேதான், இந்த தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் விடாமல் விடுத்தவாறே வந்தனர்..
கிட்டத்தட்ட 15 வருட காலத்துக்கு பிறகு, இந்த கோரிக்கையை நெடுஞ்சாலை துறை மற்றும் ரயில்வேதுறை நிறைவேறிவிட்டது. அங்கிருக்கும் தண்டவாளங்களை கடந்து செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள ரயில் நிலையங்களை கண்டறிந்து, சுரங்கப்பாதையை அமைத்தும், 'உயர்மட்ட பாலம்' அமைத்தும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வழி செய்யப்பட்டுள்ளது.
உயர்மட்ட பாலம்: கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், திருவாலங்காடு ரயில் தண்டவாளம் மீது உயர்மட்ட பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது.. இதற்காக, 32 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்கக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், திருவள்ளூரின் 40 கிராம கிராம மக்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.
இந்த உயர்மட்ட பாலம் அமைக்க முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியும் முடியபோகிறதாம்.. 900 மீட்டர் நீளத்தில், 32 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்க முன்மொழிவு அனுப்பியுள்ள நிலையில், அந்த ஒப்புதலும் கிடைத்ததும் பணி ஆரம்பமாகிவிடுமாம்..
நேரம் மிச்சப்படும்: இன்னும் ஒரே வருடத்தில், உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இந்த பாலம் மட்டும் வந்துவிட்டால், தண்டவாள விபத்துக்கள் குறையும், அரைமணி நேரம் ரயில்வே கேட்டுகளில் பொதுமக்கள் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டு, நேரம் மிச்சப்படும்.. திருவள்ளூருக்கும் கூடுதல் மதிப்பு கிடைத்துவிடும் என்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications