அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது.. யுகபாரதிக்கு பாரதிதாசன் விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனார், தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, திருவள்ளுவர் விருது, ஈ.வெ.ரா., விருது, அம்பேத்கர் விருது, அண்ணாதுரை விருது, காமராஜர் விருது, பாரதியார் விருது, கலைஞர் விருது உள்ளிட்ட விருதுகளை இன்று வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் விருது
2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ்மறைக் குடமுழுக்குகள் 1400-க்கு மேல் நடத்தி இருக்கிறார். சைவ சித்தாந்த நுண்பொருளுடன் திருக்குறளின் அறக்கருத்துகளை செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் இவர் வல்லவர்.
பெரியார் விருது
சமூகநீதி கிடைக்க பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 பேர் பெற்றுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான விருது வக்கீல் அ.அருள்மொழிக்கு வழங்கப்பட இருக்கிறது. இவர் சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, மற்றும் பெரியாரியலுடன் சேர்ந்து பாவேந்தரின் கவிதைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
அம்பேத்கர் விருது
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது சிந்தனைச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. அம்பேத்கரின் சமநீதி, அரசியலமைப்பு சட்ட நெறிகள், சமூகநீதி ஆகியவை குறித்து அழகாகவும், ஆழமாகவும் முழங்கி வருபவர்.
அண்ணா விருது
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுகிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்தவர். இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தற்போது நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
காமராஜர் விருது
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் அனைத்துச் சமயக் கோட்பாட்டு இலக்கியங்களையும் ஒப்பிட்டு மேடைகளில் உரையாற்றுவார்.
பாரதியார் விருது
பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர், பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997-ம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் ஆகிய பன்முக ஆற்றலைக் கொண்டவர்.
பாரதிதாசன் விருது
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது. இவர் இரண்டாயிரம் திரைப்பட பாடல்களை எழுதிய பாடலாசிரியர். மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது வெ.இறையன்புக்கு வழங்கப்படுகிறது. இவர் எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களில் ஈடுபாட்டுடன் இயங்கித் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக செயலாற்றிப் பணி நிறைவு பெற்றவர்.
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
2025-ம் ஆண்டுக்கான இந்த விருது சு.செல்லப்பாவுக்கு வழங்கப்படுகிறது. நெல்லை நகர இந்து தொடக்கப் பள்ளியில் 1967-ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பு பற்றித் தனிவழிகளைக் கண்டுபிடித்து முறைகளைக் கையாண்டு பாடங்களைப் புதுமையான முறையில் நடத்தியவர்.
கலைஞர் விருது
கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024-ல் தோற்றுவிக்கப்பட்டது.2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, விடுதலை விரும்பிக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.
இந்த விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு, தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
பட்டா மாறுதல் செய்றீங்களா? வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் 15 நாளில் கிடைக்க புதிய லிங்க் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications