இதுதான் சென்னை ஐடி காரிடர்! இன்போசிஸ், டிசிஎஸ், காக்னிசன்ட் கம்பெனி உள்ள ஏரியாவின் கண்டிஷனை பாருங்க
சென்னை: சென்னையின் ஐடி காரிடர் பகுதிகளான எகாட்டூர், நாவலூர், சிறுசேரி போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை என்று புகார் எழுந்துள்ளது. பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் தினமும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று நெட்டிசன் குற்றம்சாட்டி உள்ளார்
சென்னையின் ஐடி காரிடர் பகுதிகளாக அடையாறு முதல் இந்திரா நகர், திருவான்மியூர், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சிறுசேரி, நாவலூர், இந்த பக்கம் வேளச்சேரியில் இருந்து எடுத்துக்கொண்டால் பள்ளிக்கரணை, கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் விமான நிலையம் வரை அமைந்துள்ளன.

தென்சென்னையின் முக்கியமான பகுதியான சோழிங்கநல்லூர், வேளச்சேரியை சுற்றியுள்ள இந்த பகுதிகள் தான் ஐடி ஊழியர்களின் நகரமாக இருக்கிறது. இங்கு லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த ஐடி காரிடாரை இணைக்க ரேடியல் சாலை (பல்லாவரம் டூ துரைபாக்கம்), பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர் சாலை) , வேளச்சேரி 100 அடி சாலை, கந்தன்சாவடி சாலை போன்றவை உள்ளன. இதில் சோழிங்கநல்லூரில் இருந்து வெறும் 10 கிமீ சுற்றளவில் தான் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன.
சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகள் வரும் காலத்தில் மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுக்கும் என்பதால் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை பல கிலோ மீட்டர் தூரம் வளர்ந்துள்ள நிலையில் , தென்சென்னை பகுதிகளான கோவிலம்பாக்கம், மேடவாக்கம்,பாபு நகர், வேங்கைவாசல், பெரும்பாக்கம், மூலச்சேரி, பொன்மார், மாம்பாக்கம், ஒடியம்பாக்கம், படூர், கேளம்பாக்கம், கழிபத்தூர், எகாட்டூர், நாவலூர், சிறுசேரி, மாம்பாக்கம், தாழப்பூர் போன்ற பகுதிகள் சென்னை மாநகராட்சிக்குள் வராது. இவற்றில் சென்னை மாநகராட்சிக்கு நிகராக பாதாள சாக்கடை வசதிகளோ,குடிநீர் குழாய் வசதிகளோ, கழிவுநீர் இணைப்பு வசதிகளோ, தரமான சாலைகளோ இல்லை.
This s #chennai tech corridor. Right outside Siruseri, where TCS,Cogz,Hexa n several IT cos have 1000s of employees. Not due 2 rain. Sewage overflow daily basis right opp panchayat office. +cattle,garbage. @ptrmadurai @TRBRajaa @CMDA_Official @UpdatesChennai pic.twitter.com/J2vMPRi4GG
— H (@HariraamTrajan) June 17, 2024
இந்நிலையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள காட்டூர், நாவலூர், சிறுசேரி ஐடி பார்க் போன்ற பகுதிகளில் கழிவுநீர் இணைப்பு வசதிகள் முறையாக இல்லாத காரணத்தால் கழிவுகள் நிரம்பி சாலைகளில் வழிந்து செல்வதாக புகார் எழுந்துள்ளது.
ஹரிராம் ராஜன் என்பவர் வெளிட்ட ட்விட்டர் பதிவில், இதுதான் சென்னையின் ஐடி காரிடர் பகுதி. சிறுசேரியை ஒட்டித்தான் டிசிஎஸ், காக்னிசன்ட் , ஹெக்ஸா உள்பட பல்வேறு ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த காட்சி மழையால் ஏற்படவில்லை.. பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் தினமும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்நடைகள் அந்த பகுதியில் அதிக அளவு வலம் வருகின்றன. குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இரு சக்கர வாகனங்களின் அவலநிலையை கற்பனை செய்து பாருங்கள். தினசரி கழிவுநீரில் குளித்தபடியே அவர்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. நாவலூர், கேளம்பாக்கம் வரை சென்னை மாநகராட்சியின் கீழ் வர வேண்டும்.
பெரிய அளவிலான குப்பைகள் அகற்றும் வசதிகள், கழிவுநீர் இணைப்பு வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. தமிழ்நாட்டின் தலைநகரின் ஓஎம்ஆர் சாலையே இவ்வளவு அலட்சியத்துடன் இருந்தால், தொலைதூர பகுதிகளை எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாது" இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த பதிவு குறித்து பதில் அளித்துள்ள நெட்டிசன், "உண்மையில் வீடியோவில் நாம் பார்ப்பதை விடவும் இந்த இடம் மோசமான நிலையில் இருக்கிறது. இங்கு கடைக்காரர்கள் பழங்கள், காய்கறி கழிவுகள் மற்றும் குப்பைகளை சாலைகளில் கொட்டுகின்றனர். இதனால் ஓஎம்ஆர் சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை ஓரத்தில் நடப்பதோ வாகனத்தில் செல்வேதா மிகவும் கடினமானதாகும். ஏனெனில் அப்பகுதியில் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலை ஐடி காரிடார் போல் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த ஐடி காரிடர் சாலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எவ வேலு ஆகியோரை டேக் செய்துள்ள பலர், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications