தவெகவின் வாக்கு வங்கி இவ்வளவுதான்.. விஜயிடம் அடித்து சொன்ன பிரசாந்த் கிஷோர்.. வெளியான "நம்பர்"
சென்னை: சமீபத்தில் நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் நடிகர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். சுமார் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்து உள்ளது. பிகே இப்போது ஐபேக்கில் இல்லை. இதனால் அவர் கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக வர மாட்டார். ஐபேக்கும் வராது. (ஐபேக் திமுகவிடம் மீண்டும் செல்வதாக பேச்சு உள்ளது)

இதனால் பிகே விஜய்க்கு வேலை செய்ய மாட்டார். மாறாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கு உதவலாம். மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்ட போது அதற்கு பிகே பணிகளை செய்துள்ளார். அதேபோல் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படையை உருவாக்க இவரை அழைக்கலாம்.
விஜய் மாநிலம் முழுக்க யாத்திரை செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் அதற்கான திட்டங்களை வகுக்கலாம். அல்லது தனிப்பட்ட வகையில் விஜய்க்கு அரசியல் ட்ரெயினிங் தரலாம். குஜராத் முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு காய் நகர்த்திய போது பிகே மோடிக்கும் இதே பயிற்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக செய்தியாளர் சந்திப்பில் எப்படி பேச வேண்டும் என்று மோடிக்கு பிரசாந்த் கிஷோர்தான் ஆலோசனை வழங்கினார்.
ஆலோசனை வழங்கினார்
விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையாக திட்டமிட்டு வேலைகளை செய்தால் இதை உயர்த்தலாம். விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.
ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம். முறையாக வேலைகளை செய்தால் திட்டமிட்டபடி 20 சதவீதம் வரை வாக்கு வங்கி வாங்கலாம். தீவிரமாக பணிகளை செய்தால் அதைவிட கூடுதலாக வாக்கு வங்கி வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கி உள்ளாராம்.
ஸ்பெஷல் ஆலோசகர்
ஆதவ் அர்ஜுனா விஜயுடன் கரம் கோர்த்து உள்ளார். ஏற்கனவே கட்சியின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் பிரசாந்த் கிஷோர் உடன் திடீரென சந்திப்பு நடந்திருப்பது விவாதங்களை எழுப்பி உள்ளது.
இதற்கு காரணம் பிரஷாந்த் கிஷோர் விஜயின் ஸ்பெஷல் ஆலோசகராக மாற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தல் வரை ஸ்பெஷல் ஆலோசகர் என்ற பெயரில்.. விஜய்க்கு தனிப்பட்ட வகையில் ஆலோசனைகளை வழங்குவார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.
ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம்.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications