இன்னும் 3 வாரம்தான் இருக்கு.. உடனே போங்க.. வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு.. கடைசி சான்ஸ்
சென்னை: 2021-22 (FY22) மற்றும் 2022-23 (FY23) நிதியாண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட.. அதாவது அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR-U) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31ம் தேதிக்குள் இந்த வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும்.
வருமானத்தைப் மறுத்தவர்கள், சரியாக வருமானத்தை காட்டாமல் தவறவிட்ட வரி செலுத்துவோர், அசல் வருமானத்தில் பிழைகள் செய்தவர்கள் அல்லது தங்கள் ITR ஐ முன்பே தாக்கல் செய்யத் தவறியவர்கள் இன்னும் தங்கள் returnஐ சரிசெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. நிதிச் சட்டம் 2022ன் கீழ் ஒரு மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வரி செலுத்துவோர் தங்கள் ஐடிஆர்களை சரிசெய்ய நிதி அமைச்சகம் அனுமதித்தது.

அதாவது ஒரு மதிப்பீட்டு ஆண்டில் இருந்து அடுத்த 2 வருடங்களுக்குள் நீங்கள் புதுப்பிக்கப்பட்ட.. அதாவது அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை (ITR-U) தாக்கல் செய்ய முடியும்.
வருமான வரி நோட்டீஸ்
நாடு முழுக்க 40 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாம். அவர்களின் வருமான வரி முறைகேடுகள் அல்லது தவறுகள், வருமான வரி தாக்கலில் அவர்கள் செய்த குளறுபடிகள் தொடர்பாக விளக்கம் கேட்டு மெயில் அனுப்பி உள்ளனர்.
இந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
யாருக்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பப்படும்
1. அடிக்கடி வருமான வரி தாக்கலில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2. அடிக்கடி பொய்யான ஆவணங்களை தந்து வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இந்த
சிக்கலில் மாட்டுவார்கள்.
3. பொய்யான கணக்கு காட்டி விலக்கு பெற்றவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
4. இவர்கள் நோட்டீஸுக்கு விளக்கம் தந்து கூடுதல் வரியை செலுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
5. அவர்கள் செய்த தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பறக்கும் நோட்டீஸ்
நாடு முழுக்க பல சம்பளதாரர்களுக்கு வருமான வரித்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை பொய்யான வீட்டு வாடகை பில்களை கொடுத்தவர்களை சோதனை செய்ய தொடங்கி உள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பலரும் பொய்யாக வீட்டு வாடகை பில் கொடுக்கின்றனர்.
இந்த நிலையில் சிலர் 1 லட்சத்திற்கும் மேல் வருடம் வாடகை கட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர். இதற்கு பொய்யான பான் கார்டு விவரங்களை வீட்டு ஓனர் விவரம் என்று பலர் அளிப்பது உண்டு. முக்கியமாக பல சிஏக்கள் ஒரே மாதிரியான பொய்யான பான் கார்டு விவரங்களை பல கிளைண்டுகளுக்கு பயன்படுத்துவது உண்டு.
இப்படிப்பட்ட விவரங்களை வைத்து தவறாக refund பெறக்கூடியவர்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இவர்களுக்கு கடந்த 2 நாட்களாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. முக்கியமாக் 1 லட்சத்திற்கு மேல் வாடகை கணக்கு காட்டியவர்களுக்குத்தான் பான் கார்டு அவசியம் என்பதால் அவர்களைத்தான் வருமான வரி துறை விசாரிக்க தொடங்கி உள்ளது. இவர்கள் விளக்கம் அளிக்க நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31, 2024 இல் வரை இதற்காக காலக்கெடு உள்ளது. இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அதற்கு உரிய வரி மட்டும்.. 200%மாக உயர்த்தப்பட்டு அபராதமாக விதிக்கப்படும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications