சிஎஸ்கே மேட்சுக்குக் வேட்டு வைக்க போகுதா மழை?.. வானிலை பயங்கரமாக இருக்க போகுது.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு இருக்கா? வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்துள்ளார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு செல்லுமா என்ற எதிர்பர்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றல் பிளே ஆஃப் வாய்ப்பை கிட்ட தட்ட உறுதி செய்து விடலாம்.
இருந்தாலும் தற்போது நிலவரப்படி சிஎஸ்கே அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சென்னையில் நடைபெறும் கடைசி லீக் போட்டியும் இதுதான் ஆகும். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
தோனி எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களிலும் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர். தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.
இதனால் தோனியின் தரிசனத்தை காணவே ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்கின்றனர் என்றால் மிகையல்ல. இதனிடையே, இன்று சென்னையில் ஈரப்பதமான வானிலை நிலவக்கூடும் மழைக்கு லேசான வாய்ப்பு இருப்பதாகவும் Cricbuzz ல் குறிப்பிடப்பட்டு இருந்தது. சென்னை அணியின் போட்டியைக் காண மைதானத்திற்கு குவியும் ரசிகர்களுக்கு இது லேசான கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டரில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். அதேவேளையில், மழை பெய்யாவிட்டாலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னது மழைக்கு லேசான வாய்ப்பு இருக்கா.. என்ன இதெல்லாம் என்கிட்ட கேளுங்க..சென்னையில் மாலை 5.30 மணியளவில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இன்னைக்கு மேட்சிற்கு போகிறவர்கள் எல்லாம் நன்றாக தண்ணீர் குடித்து விட்டு (நீரேற்றத்துடன்) போங்க.. வீரர்களும் கூட. ஏனெனில் 7.30 மணிக்கு கூட வானிலை பயங்கரமாக இருக்க போகிறது" என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications