Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க சூப்பர் சான்ஸ்.. நோட் பண்ணுங்க.. அரசின் மாஸான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக பாரம்பரிய கட்டமான ரிப்பன் மாளிகை விளங்கி வருகிறது. 1688 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் மெட்ராஸ் மாநகராட்சி செயலப்டத் தொடங்கியது. மாநகராட்சிக்கான தனிக் கட்டடத்திற்காக 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மின்டோ பிரபு ரிப்பன் மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார்.

chennai

1913 ஆம் ஆண்டு ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷார் முன்னெடுத்த கட்டிடக் கலையான இந்தோ-சராசனிக் பாணியில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.

இந்த மாளிகையை லோகநாத முதலியார் என்பவர் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டிக் கொடுத்தார். இதில், 5.5 லட்சம் ரூபாய் அவருக்கு ஊதியமாகவே கொடுக்கப்பட்டதாக தரவுகளில் தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிப்பன் மாளிகை செவ்வக வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது.

கட்டடத்தின் முதல் மூன்று தளங்களும் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாளிகையில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 8.2 அடியாகும். ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஏராளமான சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை நமக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல் சார்ந்த பணிகளும் இந்த ரிப்பன் மாளிகையில்தான் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்நிலையில், இந்த பழமை வாய்ந்த சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரிப்பன் மாளிகையைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது கவ்லி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மூலம் [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 94451 90856 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும், ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+