"பணமதிப்பிழப்பை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது" சொல்வது அண்ணாமலை!
சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் இரவு 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசின் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஒரே இரவில் பல கோடி மதிப்பிலான இந்திய ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு இல்லை என்றும், அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக 58 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா, ஏ.எஸ் போபன்னா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்துள்ளது.

நீதிபதி நாகரத்னா
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 4 பேர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளார். குறிப்பாக நாடாளுமன்றத்தில் ஆலோசிக்காமல் பணமதிப்பிழப்பு குறித்து முடிவு எடுத்திருக்கக் கூடாது என்றும், பணமதிப்பிழப்புக்கான ஒட்டுமொத்த நடவடிக்கையும் 24 மணி நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நிறைவேற்றாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை கருத்து
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பலரும் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆராய்ந்து தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பலரும் முறையான பொருளாதார வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இதற்கு பணமதிப்பிழப்பு மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. பணபுழக்கம், டிஜிட்டல் கரன்சி அதிகரிப்பு, ஆன்லைன் வணிகம் என ஏராளமான நன்மைகள் ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபணமாகவில்லை. அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் அரசியல் செய்தார்கள். 2019, 2021 ஆகிய தேர்தல்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து அரசியல் செய்யப்பட்டது. அப்படி அரசியல் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமிது. பணமதிப்பிழப்பிற்கு மத்திய அரசு சொல்லிய காரணமும் சரி என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்று தெரிவித்தார்.

பெரிதுபடுத்த தேவையில்லை
அதேபோல் நீதிபதி நாகரத்னா வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு குறித்த கேள்விக்கு, 1975-76 காலக்கட்டத்தில் அரசியல் சாசன அமர்பில் மாறுபட்ட தீர்ப்பு என்பது தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த வழக்கிலும் 4 பேர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்றும், ஒருவர் மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பு அளித்துள்ளனர். அந்த கருத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்பது என் கருத்து என்று தெரிவித்தார்.
-
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications