கீரிப்பிள்ளைகளை வேட்டையாடி இப்படி பண்றாங்களா? வனத்துறை அதிரடி ஆக்ஷன்! சுப்ரியா சாஹு வெளியிட்ட தகவல்
சென்னை: ஓவியம் வரையும் பிரஷ்கள் தயாரிப்பதற்காக கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதாகவும், இதைத் தடுக்கும் வகையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரஷ்களை பறிமுதல் செய்து, விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பாம்பே பயந்து நடுங்கும் உயிரினம் என்றால் அது கீரிப்பிள்ளை. கீரிப்பிள்ளை புயல் வேகத்தில் தலையைப் பற்றிப் பிடித்து பாம்புக்கு தண்ணி காட்டிவிடும். கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்பட்டால் கீரியே ஜெயிக்கும். அப்படிப்பட்ட கீரிப்பிள்ளைகள் ஓவியம் வரையப் பயன்படுத்தப்படும் பிரஷ்களுக்காக வேட்டையாடப்படுகின்றனவாம்.

இது தொடர்பாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி கீரிகளை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் பிரஷ்கள் தயாரிக்க கீரிப்பிள்ளையின் முடிகள் பயன்படுத்தப்படுவதால் கீரிப்பிள்ளைகள் பெருமளவில் கொல்லப்படுகின்றன.
ஒரு கிலோ கீரி முடியை சேகரிக்க கிட்டத்தட்ட 50 கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுகின்றன. சட்டவிரோதமாக வன உயிரினங்கள் மற்றும் வன உயிரினப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு தொடங்கப்பட்டது.

இந்த பிரிவினர் கோவை மண்டலத்தில் இருந்து கீரி முடியால் தயாரிக்கப்பட்ட 3200 பெயிண்ட் பிரஷ்களையும், சென்னை மண்டலத்தில் இருந்து 7800 பிரஷ்களையும், மதுரை மண்டலத்தில் இருந்து 3000 பிரஷ்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தெரிந்தே வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓவியர்கள் சிந்தெடிக் பிரஷ்களை பயன்படுத்த வேண்டும். கீரிப்பிள்ளைகள் கொல்லப்படுவதை தவிர்க்க விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்தவுள்ளோம். வன உயிரிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த சட்டவிரோத வர்த்தம் நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications