சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. ஓஎம்ஆர் டைடல் பார்க் சிக்னலுக்கு குட்பாய்.. போலீசார் சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள டைட்டல் பார்க் சிக்னல் என்ற பெயரை கேட்டாலே மொத்த சென்னையும் அதிரும்.. பெயரை கேட்டாலே அதிர வைக்கும் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.. ஏனெனில் சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலையாகும்.. இங்கு ஏற்பட்டு வந்த நெரிசலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க போகிறது அரசு.. அடுத்த மாதம் முதல் எல்லாமே மாறப்போகிறது..

சென்னையில் ஐடி தொழில் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள சாலை என்றால் ஓஎம்ஆர் சாலை தான். அடையாறு கஸ்தூரி பாய் நகர் தொடங்கி, அப்படியே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதாவது நாவலூர் சிப்காட் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் அடையாறு தொடங்கி சோழிங்கநல்லூர் செல்ல பீக் அவர்ஸில் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இதில் திருவான்மியூர் ரயில் நிலையம் எதிரே உள்ள டைட்டல் பார்க் சிக்னல் மிக மோசமானது.

chennai omr traffic

அடுத்ததாக வேளச்சேரியை இணைக்கும் தரமணி சிக்னல், அதேபோல் பள்ளிக்கரணை ஏரியில் போகும் ரேடியல் சாலையில் இணையும் துரைப்பாக்கம் சிக்னல் என அப்படியே போனால் சோழிங்கநல்லூர் சந்திப்பு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள இடம் என்றால்.. அது டைடல் பார்க் சிக்னல் தான். இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க இரண்டு இடங்களில் யூடர்ன் மேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கு 2019 நவம்பரில் ₹108.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக இந்திரா நகர் சந்திப்பு அருகே யூடர்ன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் காரணமாக இந்திரா நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறைந்தது.

இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் , சிறுசேரி சோழிங்கநல்லுர், துரைப்பாக்கம், தரமணி, இருந்து அடையாறு மத்திய கைலாஷ் நோக்கி செல்லும் வாகனங்கள் உயரமான மேம்பாலம் வழியாக எளிதாக யூடர்ன் செய்ய முடிகிறது. அந்த பாலம் மூலம், இந்திரா நகர் 2வது அவென்யூ மற்றும் அங்கிருந்து செல்லும் பிற சாலைகளைப் பயன்படுத்தி போக வேண்டிய இடத்திற்கு போகிறார்கள்.

இந்நிலையில் அடுத்ததாக திருவான்மியூர் சந்திப்பான டைடல் பார்க் சிக்னலை ஒட்டியும் யூடர்ன் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த மேம்பாலம் கட்டும் பணி காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது மேம்பாலம் கட்டும்பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில பணிகளே பாக்கி உள்ளது. இந்த பணிகளை முடித்து அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இந்த புதிய யூடர்ன் மேம்பாலம் மூலம் அடையாறு, திருவான்மியூர் மற்றும் ஈசிஆர் சாலையில் இருந்து ஒஎம்ஆர் சாலைக்கு வரும் வாகனங்கள், வலதுபுறம் திரும்பி, மத்திய கைலாஸ் செல்வதற்கு பதிலாக, இனி இடதுபுறம் திரும்பி, புதிய யூடர்ன் மேம்பாலத்தில் ஏறி மத்திய கைலாஷ் மற்றும் கிண்டிக்கு போகலாம்.. அதேபோல் ஓஎம்ஆர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி , திருவான்யூர், ஈசிஆர் செல்ல வேண்டிய வாகனங்கள், இந்திரா நகர் பகுதியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட யூடர்ன் மேம்பாலத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய யூடர்ன் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட பின்னர், டைட்டில் பார்க் சிக்னல் அகற்றப்பட்டு, இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த யூடர்ன் பாலங்கள் ஒரு புறம் எனில், பாதசாரிகள் சாலையை கடக்க எந்த வழியும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாலை மிகவும் அகலமானது என்பதால் கடப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவழிப்பாதையில் தவறாகவே வருவதால் கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள், பாதசாரிகளுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+