சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எழுவர் விடுதலை விவகாரம்.. பேரறிவாளன் வழக்கு முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை.. நடந்தது என்ன ?

Google Oneindia Tamil News

சென்னை: எழுவர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் இயற்றியது முதல் ஆளுநர் நிராகரிப்பு வரை வழக்கு கடந்து வந்த பாதை என்ன?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களது தண்டனை காலம் முடிவடைந்தும் அவர்களை விடுவிக்காததால் தமிழக அரசியல் கட்சிகள் எழுவர் விடுதலை குறித்து பேசி வந்தார்கள்.

Timeline about 7 tamils release resolution incident

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கு வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அன்றைய தினம் மாலையே தமிழக அமைச்சரவை சிறப்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எழுவர் விடுதலை குறித்த தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

நவம்பர் 3, 2020- தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெற்றது.

ஜனவரி 21-ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்து 3 நாட்களில் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்தது.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்

ஜனவரி 29-ஆம் தேதிக்குள் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜனவரி 30-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுவர் விடுதலை குறித்து பரிந்துரை கடிதம் அளித்திருந்தார்.

பிப்ரவரி 4- எழுவர் விடுதலை விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் நம்பிக்கை தெரிவித்தார்.

பிப்ரவரி 4- எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என்றும் குடியரசுத் தலைவருக்கே உள்ளது என்றும் தமிழக சட்டசபை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.

பிப்ரவரி 9-ஆம் தேதி - பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் விசாரணையில் ஆளுநர் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தெரியவரும்.

English summary
Here is the timeline from Perarivalan filed case in SC to Governor rejects TN resolution to release 7 tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X