சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது முதல்.. 31 ஆண்டுகள் கழித்து விடுதலை வரை.. வழக்கின் பாதை!

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை கடந்து வந்த பாதை என்ன?

Recommended Video

    Perarivalan கைது செய்யப்பட்டது முதல் விடுதலை வரை.. கடந்து வந்த பாதை | Oneindia Tamil

    1991 மே 21- ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

    1991 ஜூன் 11- ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைது

    1991 ஜூன் 14- நளினி, ஸ்ரீகரன் என்கிற முருகனும் கைது செய்யப்பட்டார்

    1991 ஜூலை 22- சுதேந்திரராஜா எனும் சாந்தன் கைது செய்யப்பட்டார்.

    Timeline from Rajiv Gandhi Assasination to Perarivalans release plea

    1998 ஜனவரி 28- ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேரும் தூக்குத் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்

    1999 மே 11- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    1999 அக்டோபர் 8- தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.

    1999 அக்.10- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

    1999 அக்.29: ஆளுநராக இருந்த பாத்திமா பீவி இந்த கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறி உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

    1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கூறியது.

    2000 ஏப்ரல் 19: இந்த விவகாரம் குறித்த மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாககக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

    2000 ஏப்ரல் 24: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.

    2000 - 2007: இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்.

    2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருந்தாலும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

    2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

    2008 மார்ச் 19: ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார்.

    2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யபப்பட்டதாக குடியரசுத் தலைவர் அறிவித்தார். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என செய்திகள் வெளியாயின.

    2011 ஆகஸ்ட் 26: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    2014 பிப்ரவரி 18: பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

    2014 பிப்ரவரி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது மத்திய அரசு.

    2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய - மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

    2015 டிசம்பர் 2: மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால், 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க, மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

    2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

    2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்சநீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

    2018 செப்டம்பர் 9: 7 பேரையும் விடுதலைச் செய்யக் கோரி தமிழக அரசு பரிந்துரைத்தது.

    செப்டம்பர் 9- பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன் மகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

    2019 ஜூலை 1- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி பரிந்துரைத்ததை ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

    2020, ஜனவரி 21- குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழக அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்க உத்தரவிட்டது.

    2021 பிப் 2- தமிழக சட்டசபையில் எழுவர் விடுதலை குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் ஆளுநர் உரையில் அதுகுறித்த அறிவிப்புகள எதுவும் வெளியாகவில்லை.

    2022 மே 28- பேரறிவாளன் பரோலில் தனது வீட்டிற்கு வந்தார். சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

    தொடர் சிகிச்சையால் அவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதியுடன் பரோல் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கியது தமிழக அரசு

    2022 பிப்ரவரி 21- 10ஆவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

    2022 மார்ச் 9- தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    2022, மே 11: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கவர்னர் அமைச்சரவை முடிவை ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசும் மத்திய அரசும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தது. தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம் மிகப் பெரிய அரசியல் சாசன பிழையை தமிழக ஆளுநர் செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

    மே 18, 2022: பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

    English summary
    Timeline from Rajiv Gandhi Assasination to Perarivalan's release. What happened in these 30 years?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X