திருப்பதி பிரம்மோற்சவம்.. திருமலைக்கு பயணிக்கும் சென்னை திருக்குடைகள்.. கருட சேவை நாளில் அலங்கரிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழக மக்கள் சார்பாக, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், ஏழுமலையானுக்கு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது. செப்டம்பர் 25ஆம் தேதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெங்கடேசப் பெருமாள் கருட சேவைக்கு, தமிழ்நாட்டு பக்தர்கள் சார்பில், இந்து தர்மார்த்த சமிதி 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை வெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை, சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்ய உள்ளது.

சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில், 25ஆம்தேதி காலை 10 மணிக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது. தொடர்ந்து, திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது.

 யானைக்கவுனி தாண்டும் குடைகள்

யானைக்கவுனி தாண்டும் குடைகள்

யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. மாலை 6 மணிக்கு சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி, பொடிக்கடை வழியாக சென்று இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. 26ஆம்தேதி காலை 6 மணி, கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர் அகரம் சந்திப்பு திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் சென்றடைகிறது.

வீரராகவ பெருமாள்

வீரராகவ பெருமாள்

27ஆம் தேதி காலை 6 மணிக்கு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு பாடி, முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு, திருமுல்லைவாயல் சென்றடைகிறது. 28ஆம்தேதி காலை 6 மணிக்கு, ஆவடி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் வழியாக செல்கிறது.

திருமலை சென்றடையும் திருக்குடைகள்

திருமலை சென்றடையும் திருக்குடைகள்

29ஆம் தேதி திருப்பாச்சூர் கனகம்மாசத்திரம் வழியாக கீழ் திருப்பதி செல்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 30ஆம் தேதி திருக்குடைகள் திருமலை சென்றடையும். அதன்பின் திருமலை மாடவீதியில் திருக்குடைகள் வலம் வந்து வஸ்த்திரம் மற்றும் மங்கலப் பொருட்களுடன், திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருப்பதி திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

நாணயங்களை வீச வேண்டாம்

நாணயங்களை வீச வேண்டாம்

திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருக்குடை செல்லும் வழியில் தெருவிலோ, சமாஜங்களிலோ அல்லது கோவில்களிலோ பொதுவான பூஜைக்கு ஏற்பாடு செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

 சிறப்பு பூஜைகள்

சிறப்பு பூஜைகள்

ஊர்வலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பஜனை, பிரபந்தக் குழுவினர் மற்றும் கலை நிகழ்ச்சிக் குழுக்கள் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 7373099562, 7373099545 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருடசேவை

கருடசேவை

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரதானமான வைபவம். இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி கருடசேவை நடைபெறுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு புதிய குடைகள் நிழல்தரும். இந்த ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை நாளில் கருடவாகன சேவை நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+