Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி அருகே ஆசை ஆசையாய் காதலித்த காதலன் வீட்டின் முன்பு.. பெண் போலீஸ் எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவைச் சேர்ந்த பிரசாந்தி என்ற பெண் காவலராக பணியாற்றி வந்தார். இவர் சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த மார்வாடா கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், அண்மையில் அவரது வீட்டிற்கு போன போது தான். தனது காதலன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற தகவல் பிரசாந்திக்கு தெரியவந்துள்ளது. இதனால் காதலன் வீட்டின் முன்பு காவலர் பிரசாந்தி எடுத்த முடிவு, ஆந்திராவையே ஆடிப்போக வைத்துள்ளது.

காதல் விவகாரத்தில் இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்கள், பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார்கள். காதல் புரொபோல்களில் நல்லவை எது கெட்டவை எது என்று அறியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். கண்டதும் காதல், பார்த்த உடன் வரும் ஈர்ப்பை காதல் என்று நம்புவது, சினிமாவை பார்த்து கெட்டுப்போய் காதல் என்றால் இது தான்.. அது தான் என்று தவறாக நம்புவதும் பெரிய சிக்கலுக்கு வழிவகுக்கிறது.

Tirupati Chittoor women police The decision taken by police Prasanthi in front of her lover s house

காதல் விவகாரத்தில் ஆண், பெண் இருவருமே அவசரப்பட்டு முடிவெடுக்கிறார்கள்.. இதில் பெண் காவலர் ஒருவரும் விதிவிலக்கு அல்ல.. பெண் காவலர் ஒருவர் திருமணம் ஆனவரை காதலித்து ஏமாந்துள்ளார். அதனால் அவர் எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவைச் சேர்ந்த கோபால் என்பவருடைய மகள் பிரசாந்திக்கு 24 வயது ஆகிறது. இவர் பெண் காவலர் வேலை செய்து வந்தார். இவரும், சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த மார்வாடா கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவரும் ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்த்தபோது காதலித்து வந்துள்ளார்கள்.

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த தன்னுடைய காதலன் வாசுவை பார்க்க பெண் காவலர் பிரசாந்தி ஓரிரு நாட்களுக்கு முன்பு மார்வாடா கிராமத்துக்கு சென்று வாசுவை பற்றி விசாரித்திருக்கிறார். அப்போது வாசு திருமணம் ஆனவர் என தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பிரசாந்தி, வாசுவிடம் என்னை காதலித்து ஏமாற்றி விட்டாயே எனக்கூறி வாக்குவாதம் செய்திருக்கிறார். வாசுவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமான தகவலை கேள்விப்பட்ட பிரசாந்தியின் பெற்றோர் மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக சம்பவத்தன்று இரவு மீண்டும் பெண் போலீஸ் பிரசாந்தி மார்வாடா கிராமத்துக்குச் சென்று தனது காதலன் வீட்டுக்கு முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலன் வாசுவை கைது செய்தனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+