+2 தேர்வு ரிசல்ட்: 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் அரசு பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்! பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் +2 தேர்வுகளில் இந்த முறை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள்.
7,534 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மொத்தமாக தேர்வுகளை எழுதி உள்ளனர். இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தேர்ச்சி விவரங்கள்
இந்த வருடம் 12ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் பின் வருமாறு.
- தேர்வெழுதிய மொத்த மாணக்கர்களின் எண்ணிக்கை: 8,06,277
- மாணவியர்களின் எண்ணிக்கை : 4,21,622
- மாணவர்களின் எண்ணிக்கை 3,84,655
- தேர்ச்சிப் பெற்றவர்கள் : 7,55,998 (93.76%)

மாணவ மாணவியர் வேறுபாடு
மாணவியர் 4,06,105 (96.32%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் 3,49,893 (90.96%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர் 5.36% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்,
கடந்த மார்ச் - 2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 7,99,717. தேர்ச்சிப் பெற்றோர் 7,20,209. தேர்ச்சி விகிதம் 92.3%.
கடந்த முறையைவிட இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகம்.

எத்தனை பள்ளிகள்
மொத்தமாக 12ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பிய மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7499.இதில் 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 2628. 100% தேர்ச்சிப் பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை -246. 246 அரசு மேல் நிலை பள்ளிகளில் உள்ள எல்லா மாணவ, மாணவியரும் தேர்வில் வென்றுள்ளனர்.

தனியார் பள்ளிகள் விவரம்
பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி விகிதம்
1. அரசுப் பள்ளிகள் 89.06%
2 அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.87%
3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் 99.15%
4. இருபாலர் பள்ளிகள் 94.05%
5. பெண்கள் பள்ளிகள் 96.37%
6. ஆண்கள் பள்ளிகள் 86.60%
தமிழ்நாட்டில் +2 தேர்வுகளில் இந்த முறை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது.

எங்கு பார்க்கலாம்
இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications