சென்னையன்ஸ்க்கு குட்நியூஸ்..காய்கறிக்கு கோயம்பேடுக்கு அலைய வேண்டாம்! வேளான் பட்ஜெட்டில் செம அறிவிப்பு
சென்னை: 2025 -2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சென்னையில் பொது மக்களுக்கு காய்கறி தேவையை பூர்த்தி செய்ய 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு அமைக்கப்படும் எனவும், ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு ஆறு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
2025 2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தர் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். காலை ஒன்பதரை மணிக்கு அவர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது பட்ஜெட் உரை இருந்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
அவரது பட்ஜெட் உரையில்,"இயற்கை வேளாண்மைக்கான திட்டம் ரூ.12 கோடியில், 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டின் இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைபடுத்த அரசு கட்டிடங்களில் வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 1 லட்சம் ஏக்கரில், ரூ.12 கோடியில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.15 கோடியில், 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 முன்னோடி உழவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு செயல்படுத்தப்படும் வேளாண் தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ.215ல் இருந்து ரூ.349 ஆக உயர்த்தப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து சென்னையில் காய்கறி தேவை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னைக்கு அருகே 1200 ஏக்கரில் பந்தல் காய்கறி பரப்பு அமைக்கப்படும் எனவும், மேலும் கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட ஆறு காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்துடன் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications