இஞ்சி, பூண்டு சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம்! நிதியை தாராளமாக ஒதுக்கிய தமிழக அரசு! பட்ஜெட் விவரம்!
சென்னை: மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி, பூண்டு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சாகுபடிக்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
கல்வராயன் மலை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்ய ரூ.1 கோடி நிதியும், இஞ்சி சாகுபடிக்கு ரூ.3 கோடி நிதியும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இது தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு;

பூண்டு சாகுபடி
மருத்துவ குணம் நிறைந்த பூண்டு சாகுபடி, புதிதாக கல்வராயன் மலை, கொல்லிமலை போன்ற வாய்ப்புள்ள இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் ஏக்கருக்கு எட்டு ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இஞ்சி சாகுபடி
உள்நாட்டு, அயல்நாட்டு சந்தைகளில் மஞ்சள், இஞ்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உழவு, நடவுக்குரிய விதைக்கிழங்குகள், இதர இடுபொருட்களுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், ஆறு ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மூன்று கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

தக்காளி சாகுபடி
தமிழ்நாட்டில் தக்காளிப் பயிரானது வீட்டுத் தோட்டம், பாதுகாக்கப்பட்ட சூழல், பரந்த பரப்புகள் ஆகியவற்றில் சுமார் 53,000 எக்டரில் பயிரிடப்பட்டு
16 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதலில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள், தக்காளி விவசாயிகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றன. உற்பத்தி குறைவாக உள்ள மே, ஜுன், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியினை அதிகரிக்கும் விதமாக, தக்காளி விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக அல்லது இடுபொருட்களாக, ஏக்கருக்கு எட்டாயிரம் ரூபாய் மானியத்தில், ஐந்து ஆயிரம் ஏக்கரில், இத்திட்டம் நான்கு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
Recommended Video

மாற்றுப் பயிர்
ஏற்றம் தரும் மாற்றுப் பயிர் திட்டத்தில், குறைந்த வருமானத்தைத் தரக்கூடிய பயிர்களுக்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளிதப் பயிர்களை சாகுபடி செய்யவும், தானியப்பயிர்களின் அறுவடையைத் தொடர்ந்து குறுகிய கால காய்கறிகள், பழங்கள் பயிரிடவும் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 20 ஆயிரம் ஏக்கரில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications