சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆப்பு ரெடியாமே".. ஒன்னு கூட சாதகமா இல்லையே.. பறந்த "ரிப்போர்ட்".. டென்ஷனில் டெல்லி!

20 தொகுதி முடிவு குறித்த ஒரு ரிப்போர்ட் டெல்லிக்கு பறந்ததாம்

Google Oneindia Tamil News

சென்னை: யாரெல்லாம் 20 தொகுதிகளிலும், பாஜகவின் வெற்றிக்கு எதிராக வேலை பார்த்தார்கள், என்று லிஸ்ட் ஒன்றை கேட்டுள்ளதாம் பாஜக தலைமை..!

இந்த முறை பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.. அடுத்த சில தினங்களில் ரிசல்ட்டும் வர உள்ளது.. எனினும், தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்த நேரம், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளின் நிலவரங்கள் எப்படி இருக்கின்றன என்று மத்திய உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறது டெல்லி மேலிடம்.

அதன்படியே, அந்த வாரம் முழுவதும், 20 தொகுதிகளிலும் 2 முறை அலசி ஆராய்ந்து ஒரு ரிப்போர்ட்டையும் டெல்லிக்கு அனுப்பி வைத்தது உளவுத்துறை.. ஒரு தொகுதியில் கூட பாஜகவுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வரவில்லையாம்... இதுதான் அந்த ரிப்போர்ட்..

 தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் மேலும் என்ன செய்யலாம்? தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் மேலும் என்ன செய்யலாம்?

டென்ஷன்

டென்ஷன்

இதை பார்த்து டென்ஷன் ஆன மேலிடம், பிரச்சாரத்துக்கு தமிழகம் செல்லும்போது, இதை பற்றி விசாரிக்கலாம், என்று நினைத்து முடிவெடுத்திருந்தது. இதற்கு பிறகு, பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, தமிழக நிலவரம் குறித்து முதல்வர் உட்பட பல்வேறு தலைவர்களிடமும் விசாரித்துள்ளார்.. இந்த முடிவுகளை அடிப்படையாக வைத்து டெல்லி சென்றும் விவாதங்கள், ஆலோசனைகள் நடந்துள்ளன..

தாமரைகள்

தாமரைகள்

அப்போதுதான், "தமிழகத்தில் தாமரை மலர வேண்டும், இந்த முறை 20 தொகுதிகளில் 10 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற வேண்டும், அதிலும் ஸ்டார் 5 வேட்பாளர்களான அதாவது, எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு, பொன்ராதா போன்றோர் வெற்றி பெற வேண்டும், அதற்கான களப்பணியில் ஈடுபட வேண்டும் என்று கறாராக முடிவெடுக்கவும்தான், இதையடுத்தே இந்த 5 தொகுதிகளிலும் வடமாநில தலைவர்களின் வருகையும், பிரச்சாரமும் சூடுபிடித்ததாக சொல்லப்பட்டது.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இப்போதைய தகவல் என்னவென்றால், வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அது தொடர்பாக மீண்டும் ஒரு ரிப்போர்ட் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அதில், பாஜகவுக்கு 20 தொகுதிகளிலுமே சாதகமான சூழல் இல்லை என்று சொல்லப்பட்டதாம்.. அதற்கு காரணம், "20 தொகுதிகளையும் நாம்தான் கேட்டு அடித்து பெற்று கொண்டோம்.. அந்த தொகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கு இருக்கிறது..

அதிமுக

அதிமுக

அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளை நாம் பெற்று கொண்டதால், அந்தந்த தொகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள், இறங்கி வேலை செய்யவில்லை.. கூட்டணி ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.. பாஜகவுக்கு எதிரானவர்கள் மறைமுகமாகவே உள்ளடி வேலைகளை பார்த்தது, தீவிரமான அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்களுக்கு தெரியாது.. மேலும் எதிர்க்கட்சி வெற்றி பெறுவதுபோன்ற சில காரியங்களையும் தொகுதியில் செய்தனர்.. அதனாலேயே 20 தொகுதிகளிலும் வெற்றி என்று உறுதியாக சொல்லமுடியவில்லை என்பது போன்று அந்த ரிப்போர்ட் இருந்ததாம்.

 உள்ளடி வேலை?

உள்ளடி வேலை?

இதனால் கொதிப்படைந்த பாஜக தலைகள், யாரெல்லாம் தொகுதிக்குள் உள்ளடி வேலைகள் பார்த்தனர் என்பது குறித்து லிஸ்ட் எடுக்கும்படி சொல்லி உள்ளதாம்.. இவர்களுக்குதான் ரிசல்ட் வந்ததும் ஆப்பு ரெடியாக இருக்கிறது என்கிறார்கள். சென்ற முறை எம்பி தேர்தலின்போதும், பாஜக ஏன் ஒருதொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்று மேலிடம் கேள்வி எழுப்பியது. அப்போதும், அதிமுக கூட்டணி ஒத்துழைப்பு தரவில்லை என்றுதான் சொல்லப்பட்டது.. இப்போதும் அப்படியே ஒரு காரணம் சொல்லப்பட்டு வருகிறதாம்.. முதலில் ரிசல்ட் வரட்டும்.. பார்க்கலாம்..!

English summary
TN Assembly Election: BJP report sent Delhi about 20 Constitutions, Say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X