காங். பிடிவாதமாக கேட்டது 41 தொகுதிகள்... 24-ல் நிற்கும் திமுக.. 25 கிடைக்கலாம்.. இதுதான் நிலவரம்!
சென்னை: 41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கும் நிலையில்தான் இருக்கிறதாம் திமுக.
Recommended Video

சட்டசபை தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ் தற்போதுவரை இடம்பெற்றுள்ளது. திமுக இந்த முறை அதிக இடங்களில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது.

திமுக பிடிவாதம்
இதனால் லோக்சபா தேர்தலைப் போல கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்களை வழங்க மறுக்கிறது. கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கும் இடங்களுக்கு நேர் எதிராக சொற்ப தொகுதிகளைத்தான் கொடுப்போம் என்பதில் பிடிவாதமாகவே இருக்கிறது திமுக.

மனக்கசப்பில் கூட்டணிகள்
இது திமுக கூட்டணியில் வெளியில் சொல்ல முடியாத பெரும் மனக்கசப்பை வெளிப்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் மிகப் பெரும் மனக்குமுறலில்தான் இருக்கின்றன. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் ஆகக் கூடுமானவரை திமுகவுடன் போராடி தொகுதிகளை பெறலாம் என நினைக்கின்றன அந்த கட்சிகள்.

பங்குச்சந்தை போல பேரம்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 41 தொகுதிகளை எதிர்பார்த்தது. திமுகவோ பங்கு சந்தை கணக்காக தொகுதிகள் எண்ணிக்கைகளில் ஏற்ற இறக்கங்களை காட்டியது. ஒருகட்டத்தில் 18 தொகுதிகள் என்றெல்லாம் பேசப் போய் கடுப்பாகிப் போகினர் காங்கிரஸ் தலைவர்கள்.

24 தொகுதிகளில் நிற்கும் திமுக
18-ல் தொடங்கிய பேரம் 20, 22 என நகர்ந்தது. சென்னையில் நேற்று இரவு கே.எஸ். அழகிரி தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திய போது 24 தொகுதிகள்தான் என உறுதியாக சொன்னது திமுக. கூட்டணியைவிட்டு காங்கிரஸ் போகாது என்கிற நினைப்பில் திமுக இப்படி சொன்னதா? அல்லது போனால் போகட்டுமே என இப்படி ஒரு நிலைப்பாட்டில் திமுக இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

25 தொகுதிகள்தான்... காங். நிலை?
திமுக அணியில் கடைசியாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். இதற்கு மேல் வாய்ப்பு இல்லை. இந்த 25 தொகுதிகளை மனப்புழுக்கத்துடன் ஏற்கிறோம் என சொல்லப் போகிறதா காங்கிரஸ்? அல்லது நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில் கூட்டணிக்கு குட்பை சொல்கிறோம் என்று அறிவிக்கப் போகிறதா காங்கிரஸ்? என்பதுதான் இப்போதைய நிலை.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications