திமுகவின் வெற்றிக்கு அமோகமாக கை கொடுக்கும் விசிக, முஸ்லிம் கட்சிகள் - டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்கு விசிக, முஸ்லிம் கட்சிகள் மிகப் பெரிய அளவுக்கு கை கொடுத்திருக்கின்றன என்கிறது டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள்.
Recommended Video
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படுகின்றன. நாளை பிற்பகல் அல்லது மாலையில் வெல்லப் போவது யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.
இதனிடையே சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள், திமுக அணிக்கு சாதகமாக இருப்பதாக கூறியுள்ளன. அத்துடன் ஒவ்வொரு மண்டல வாரியாக எந்த கட்சிக்கு ஆதரவு என்பதையும் சில நிறுவனங்கள் கணித்துள்ளன. அதேபோல் ஜாதி, மத அடிப்படையிலான கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல்
டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் திமுக அணி 175; அதிமுக அணி 57; இதர கட்சிகள் 2 இடங்கள் கிடைக்கும் என கணித்துள்ளன. திமுக அணிக்கு 51%; அதிமுக அணிக்கு 37% வாக்குகள் கிடைக்குமாம். இதர கட்சிகள் அனைத்தும் 12% வாக்குகளைப் பெறக் கூடுமாம்.

பிசி, எம்பிசி வாக்குகள்
டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகளில் ஜாதிய அடிப்படையிலான வாக்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் திமுகவுக்கு 52%; அதிமுகவுக்கு 39% கிடைக்குமாம். மிக பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் 47% திமுகவுக்கும் 45% அதிமுக அணிக்கும் போகுமாம்.

தலித் வாக்குகள்
தலித்துகள் (தாழ்த்தப்பட்டோர்) வாக்குகளில் 62% திமுகவுக்கும் 31%தான் அதிமுகவுக்கும் கிடைக்கும். எம்ஜிஆர் காலம் தொடங்கி அதிமுகவின் வாக்கு வங்கியாக இருப்பது தலித் வாக்குகள்தான். இந்த முறை தலித் வாக்குகள் பெருமளவு திமுக அணிக்கு செல்கிறது. இதனை சுட்டிக்காட்டியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், திமுக அணியின் வெற்றியின் விசிக பங்களிப்பை ஊடகங்கள் பதிவு செய்வார்களா? என பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

விசிகவால் திமுக அணிக்கு ஆதாயம்
சட்டசபை தேர்தலுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி திமுக அணியில் விசிக நீடிக்குமா? நீடிக்காதா? என்கிற குழப்பங்கள் இருந்தன. தொகுதிகள் குறைவாக ஒதுக்கப்பட்டதால் விசிக, கூட்டணியில் இருந்து வெளியேறும் எனவும் கூறப்பட்டது. இன்னொரு தரப்பில் விசிகவின் ஓட்டுகள் கொத்தாக திமுகவுக்கு வர சாத்தியமில்லை; அதனால் திமுக அணியில் இல்லாமலேயே இருக்கலாம் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள் இந்த விமர்சனங்களை தகர்த்துள்ளன; விசிக மூலமாக தலித்துகளின் வாக்குகள் ஒருசேர திமுக அணிக்கு குவிகின்ற சாத்தியமுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டியுள்ளது.

கிறிஸ்தவர்கள் வாக்குகள்
மத அடிப்படையிலான பகுப்பாய்வையும் டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ளது. கிறிஸ்தவர்களில் 48% பேர் திமுகவுக்கும் 39% அதிமுக அணிக்கும் வாக்களித்துள்ளனர் என்கிறது இந்த ஆய்வு. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள், பாஜகவை வெகுதொலைவில் வைத்து பார்க்கவில்லை. தமிழகத்திலும் கூட அதேபோன்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறதோ என்பதையே இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

திமுக அணிக்கு முஸ்லிம்கள் ஆதரவு
அதேநேரத்தில் முஸ்லிம்களில் 68% பேர் திமுகவுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு. அதிமுக அணிக்கு 23% மட்டும் முஸ்லிம் வாக்குகள் கிடைத்திருக்கிறது என்கிறது. திமுக அணியில் முன்னெப்போதும் இல்லாததைவிட பெரும்பாலான முஸ்லிம் கட்சிகள் கை கோர்த்து நின்றன. சீட்டுகள் குறைவான கிடைத்தாலும், சீட்டுகளே கிடைக்காமல் போனாலும் கூட மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் குரலை வலுப்படுத்துவோம்; பாஜகவுக்கு எதிராக அணி திரள்வோம் என்கிற உறுதிப்பாட்டை முஸ்லிம் கட்சிகள் வெளிப்படுத்தின. அதன் எதிரொலியாகவே பெருமளவு முஸ்லிம் வாக்குகள் திமுக அணிக்கு அப்படியே கிடைக்கிறது என்பதையும் டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிட்டுள்ளன.

எடுபடாத ஓவைசி கட்சி
மேலும் தமிழக தேர்தல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஓவைசியின் கட்சி. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெற்ற வெற்றியால் ஓவைசி கட்சி தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற விவாதம் தொடர்ந்து இருந்தது. திமுக கூட தொடக்கத்தில் ஓவைசி கட்சியை கூட்டணியில் சேர்க்க முன்வந்தது. ஆனால் தமிழக முஸ்லிம் கட்சிகள் திட்டவட்டமாக ஓவைசி கட்சியால் இங்கே எதையும் செய்துவிட முடியாது என உறுதியாக நின்றன. இதனால் திமுகவும் ஓவைசி கட்சியை கழற்றிவிட்டது. அமமுகவுடன் இணைந்து ஓவ்வைசி கட்சி போட்டியிட்டது. ஆனாலும் ஓவைசி கட்சியால் திமுகவுக்கு செல்லக் கூடிய முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியவில்லை என்பதுதான் கள யதார்த்தம் என்கிறது இந்த எக்ஸிட் போல் முடிவுகள்
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications