Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபையில் இன்றும் அனல்.. ஆளுநர் ரவிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்.. செல்வப்பெருந்தகை கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த அரசின் நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரையைத் தொடங்குகிறேன். "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு.

TN Assembly today Debate on the Governors speech.. Chief Minister Stalin to give thanks on 15 Budget on 19

நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன.

உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையில் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், நன்றி என்று கூறி தனது உரையை முடித்தார்.

தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார். உரையில் உள்ள பல அம்சங்களை ஏற்கவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார்.

ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். உரையை படிக்காதபோதும் சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்திருந்தார். ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்து நிறைவு செய்தார்.

இதனையடுத்து சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்ட உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி புறக்கணித்த உரை சட்டசபையில் பதிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் ஆளுநர் பேசிய சில வார்த்தைகள் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு சட்டசபைக்கூட்டம் நிறைவடைந்தது. அதன்பின் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆராய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடியது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு "பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார். ஆளுநர் உரை மீதான விவாதம், அதற்கான முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 16 முதல் 18 ஆம் தேதி வரை பேரவைக்கு விடுமுறை. அதன் பின்னர் பிப்ரவரி 19ஆம் தேதியன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இதனையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சட்டசபை உறுப்பினர் ராஜேந்திரன் முன் மொழிந்தார்.
இதனிடையை நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு நிலவரம், மழை வெள்ள பாதிப்பு நிவாரணம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனை, இலவச வேட்டி சேலை ஊழல், முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் அனலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே சட்டசபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+