சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. 17 பேர் கொண்ட குழு.. தேர்தலுக்கு தயாராகிறது தமிழக பாஜக..!

17 பேர் அடங்கிய குழு அமைத்தது தமிழக பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில அளவிலான குழுவை பாஜக அமைத்துள்ளது.. இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2016-ல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 வருஷங்களாகவே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் 2019ம் ஆண்டு ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

ஆனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்படவில்லை... எனவே, மேற்கண்ட இந்த 9 மாவட்டங்களில், செப்டம்பர் 15 க்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..

அதிமுக செய்யாததை நீங்களாவது செய்யுங்கள்... ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் கொங்கு ஈஸ்வரன்..!அதிமுக செய்யாததை நீங்களாவது செய்யுங்கள்... ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் கொங்கு ஈஸ்வரன்..!

திமுக

திமுக

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன... குறிப்பாக, திமுக, பாமக, தேமுதிக மும்முரமாகி உள்ளன.. குறிப்பாக, திமுக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. ஆனால், அதிமுகவின் நிலைப்பாடு முழுமையாக தெரியவில்லை.. இன்றைய தினம் அக்கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அறிவிப்பு

அறிவிப்பு

அதேசமயம், கடந்த மாதம், எல்.முருகன் ஒரு பேட்டி தந்திருந்தபோது, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாகவும், தற்போதுள்ள கூட்டணியே தொடரும் என்றும் கூறியிருந்தார்.. ஆனால், அதிமுக தங்கள் கூட்டணி பற்றி இதுவரை எந்த தெளிவான அறிவிப்பும் வெளியிடவில்லை.. இந்த 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று முதல் 4 நாட்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

 அதிமுக

அதிமுக

எப்படி இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தே இந்த முறையும் பாஜக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவோ, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க மாநில அளவிலான குழுவை அமைத்துள்ளது...

 17 பேர் குழு

17 பேர் குழு

அந்த குழுவில், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், விபி துரைசாமி, எம்.என்.ராஜா, பொது செயலர்கள் கே.டி.ராகவன், செல்வகுமார், ராம ஸ்ரீனிவாசன், கரு.நாகராஜன், செயலாளர் கார்த்தியாயினி, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறப்பு அழைப்பாளர்கள் ராமலிங்கம், கு.க.செல்வம், சம்பத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Recommended Video

    மேகதாது அணை : கர்நாடகாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் மத்திய அரசு.. நல்லதே நடக்கும்.. அண்ணாமலை பேச்சு
     முடிவுகள்

    முடிவுகள்

    தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை, குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடக்க போகும் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி நிலவரங்கள் குறித்தும் இந்த குழு ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது..!

    English summary
    TN BJP is getting ready to face Local body elections 2021
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X