சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் பக்தி பெருக்கோடு தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதேபோல் துலாப்பள்ளியில் உள்ள அன்னதான முகாமுக்கும் அண்ணாமலை சென்றார். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். குற்றவாளிகளுக்கு பாஜகவில் இடமில்லை; கடினமாக உழைத்தால் அடிமட்ட தொண்டருக்கும் பதவி என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இதற்கு முன் இருந்த பாஜக தலைவர்களை போல் அல்லாமல் பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசை நேரடியாக குற்றம்சாட்டி வருகிறார் அண்ணாமலை. இதேபோல் சென்னை மழை, வெள்ள காலத்திலும் நேரடியாக களமிறங்கி பணிகளை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சி அதிமுகவா? பாஜகவா? என்னும் கேள்வி எழுப்பும் அளவுக்கு அண்ணாமலையின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

இரு முடி கட்டி சாமி தரிசனம்
இந்த நிலையில்தான் கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். கருப்பு கலர் வேஷ்டி அணிந்து, இரு முடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்துள்ளார் அண்ணாமலை. மாஸ்க் அணிந்தபடி கையில் பையிடனும், தலையில் இருமுடியுடனும் அண்ணாமலை தரிசனத்துக்கு செல்லும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அன்னதான முகாமுக்கு சென்றார்
அண்ணாமலை சிறப்பு தரிசனம் மூலம் ஐயப்பனை வழிபட்டுள்ளார். சாமி தரிசனத்தை முடித்த அண்ணாமலை திரும்பும் வழியில் துலாப்பள்ளியில் உள்ள அன்னதான முகாமுக்கு சென்றார். அவர் அங்கு குருசாமிக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகளும், அங்குள்ளவர்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video

இனி நல்லதே நடக்கும்
அண்ணாமலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். ''சுவாமியே ஐயப்பா'' ''இனி நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும்'' ஐயப்பன் உங்களுக்கு நல்லதே செய்வார்'' என்று பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு.. ஐயப்பனை தரிசித்த அன்புமணி ராமதாஸ்! கூடவே சென்ற பேரக் குழந்தைகள்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications