சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்பு- அரசுபள்ளி மாணவருக்கு இடஒதுக்கீடு- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கேபினட் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டுவருவது விவாதிக்கப்பட உள்ளது.

Recommended Video

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை கேபினட் கூட்டம்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக உச்சமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

    TN Cabinet to meet on tomorrow for 10% Reservation

    கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

    5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும் 5 மைக்ரோ பிளான்.. ராதாகிருஷ்ணன் களமிறக்கும்

    இதன் பின்னர் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை கூட்டத்திலும் வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துவார் என்கின்றன கோட்டை தகவல்கள்.

    English summary
    Tamilnadu Cabinet will meet on monday to discuss on Internal Reservation for Govt School Students in Medical Admissions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X