Tamil Nadu Class 12 Result 2025: பிளஸ் 2 மார்க் ஷீட்டை Digilocker-ல் டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் Digilocker மூலம் மதிப்பெண் சான்றிதழை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 91.94 சதவீதமும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.71 சதவீதமும் தனியார் பள்ளிகளில் 98.88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in or dge.tn.gov.in. ஆகிய வெப்சைட்டுகளில் செக் செய்ய வேண்டும். அதில் "TN HSE +2 Result 2025" அல்லது "TN SSLC Result 2025" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு பேஜ் ஓபனாகும், அதில் தேர்வு எண்ணையும் உங்கள் பிறந்த தேதியையும் கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் வெளியாகும்.
ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் மேற்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிய ஆர்வம் காட்டுவர். இதனால் சர்வம் முடங்க வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க வேகமான முடிவுகளை DigiLocker மூலமும் அறியலாம்.
முதலில் https://results.digilocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Tamil Nadu State Board 12th Result 2025 என இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானதும் digilocker மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு அதில் மொபைல் எண் கொண்டு பதிவு செய்ய வேண்டும். மொபைலில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதில் Get Started என இருப்பதை கிளிக் செய்து புதிய கணக்கை Create Account தொடங்க வேண்டும். மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி கொண்டு ஓடிபி எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் எண்ணை கொண்டு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். அதில் Tamil Nadu Marksheet என தேடி, அதில் பதிவு எண் , தேர்வு எழுதிய மாதம், ஆண்டு கொடுத்தால் மதிப்பெண் சான்றிதழ்கள் வந்துவிடும். அப்படியே டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பெற்றுள்ளது. அரியலூரில் 98.82 சதவீதம் பேரும் ஈரோட்டில் 97.98 சதவீதம் பேரும், திருப்பூரில் 97.53 சதவீதம் பேரும் கோவையில் 97.48 சதவீதம் பேரும் கன்னியாகுமரியில் 97.01 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 7,92,494 மாணவர்களின் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ரிசல்ட் எதுவாக இருந்தாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
தேர்ச்சி பெறாதவர்களுக்கும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கும் காலம் இன்னும் பல வாய்ப்புகளை வழங்கத்தான் போகிறது. இது வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான Phase அமைய போகிறது. positive outlookடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணை நில்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications