செம டிவிஸ்டு.. விஜயபாஸ்கருக்கு இன்ப அதிர்ச்சி தந்த இபிஎஸ்.. விக்கித்து போன திமுக.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்தது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் இந்த வருடத்தில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. மீண்டும் இரண்டாம் அலை ஏற்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திலும் சராசரியை விட 200-300 கொரோனா கேஸ்கள் தினமும் அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வேகம் எடுக்காத வகையில் அரசு கட்டுப்பாட்டுடனும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

சிறப்பு

சிறப்பு

கொரோனா பரவல் இந்தியாவில் அதிகம் இருந்த போது மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாகவே செயல்பட்டது. அதிக அளவிலான தினசரி கொரோனா டெஸ்ட், அதிக அளவிலான சோதனை மையங்கள், விரைவான டிஸ்சார்ஜ், கட்டுபாட்டு முறைகள் என்று தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டது . மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் சிறந்த உதாரணமாக இருந்தது.

எப்படி

எப்படி

முதல்வர் பழனிசாமி இந்த கொரோனா தடுப்பு பணிகளை நேரடியாக கண்காணித்தார். குடும்ப நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இதில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தினார். கொரோனா தடுப்பு பணிகள் நடந்து வந்த அந்த சமயத்தில் முதல்வருக்கும், விஜயபாஸ்கருக்கும் இடையே கருத்து வேறுபாடு..விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதை முதல்வர் விரும்பவில்லை என்றெல்லாம் செய்திகள் பரவியது.

செய்திகள்

செய்திகள்

இருவருக்கும் இடையில் மோதல் என்றெல்லாம் பொய்யான செய்திகள் பரவியது. மீண்டும் விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் என்றும் கூட பொய்யான நிறைய செய்திகள் உலா வந்தது. தற்போது அந்த செய்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல்வர் பழனிசாமியே அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டி உள்ளார்.

பாராட்டு

பாராட்டு

விராலிமலை தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கருக்காக பிரச்சாரம் செய்த முதல்வர் தனது பேச்சில், தமிழகத்தில் விஜயபாஸ்கர் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார். நோயாளிகளின் மனசு குளிரும் படி செயல்பட்டவர் விஜயபாஸ்கர். நேரடியாக அவர்களை சந்தித்து, சிகிச்சையில் உடன் இருந்து அன்பாக பார்த்துக் கொண்டார். எல்லோரும் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

சிறப்பு

சிறப்பு

அவர் சிறப்பாக செயல்பட்டதால்தான் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி வெளிப்படையாக பாராட்டினார். முதல்வரின் பாராட்டை பார்த்து பிரச்சாரம் நடந்த இடத்திலேயே விஜயபாஸ்கர் சிரித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். தனக்கும் விஜயபாஸ்கருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை இபிஎஸ் வெளிப்படையாக இதன் மூலம் உணர்த்தி உள்ளார்.

இரண்டு விஷயங்கள்

இரண்டு விஷயங்கள்

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் புதுக்கோட்டை அரசியலில் நடந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் குஷியில் மீண்டும் விஜயபாஸ்கருக்குக்காக உழைக்க தொடங்கி உள்ளனர். நிர்வாகிகள் குழப்பம் இன்றி தேர்தல் பணிகளை இதனால் மேற்கொள்ள முடியும் , இது இன்னொரு பக்கம் திமுகவிற்கு பின்னடைவாக மாறியுள்ளது.

கையில் எடுத்துள்ளது

கையில் எடுத்துள்ளது

மக்கள் மத்தியில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அதிமுகவிற்கு நல்ல இமேஜ் இருக்கிறது. இதைப்பற்றி இத்தனை நாட்களாக அதிமுக பேசாமல் இருந்தது. தற்போது அந்த விஷயத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தினோம்.. அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அதிமுக தனது சாதனையை கூறி கண்டிப்பாக வாக்கு சேகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+