அப்பாவின் "ரைட் ஹேண்ட்".. வீட்டிற்கே கிளம்பி போன முதல்வர்.. கையைப்பிடித்து கலங்கிய மகன்.. நெகிழ்ச்சி
சென்னை: உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிச்செயலாளர் சண்முகநாதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு முதல்வராக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த போது, எப்போதும் அவருடன் இருந்த தனிச்செயலாளர் சண்முகநாதன். கருணாநிதியின் கண் அசைவை பார்த்தே அவருக்கு என்ன வேண்டும், அவரின் தேவை என்ன என்று சொல்லும் அளவிற்கு நெருக்கமானவர் சண்முகநாதன்.
48 ஆண்டுகளாக கருணாநிதியின் உடன் இருந்தவர். அவரின் ரைட் ஹேண்ட், நிழல், நெருங்கிய நண்பர் என்று எல்லாமுமாக இருந்தவர் சண்முகநாதன்.

உருக்கம்
கருணாநிதியின் மறைவின் போது உடைந்து போய் கலங்கியவர் சண்முகநாதன். கருணாநிதி மறைவிற்கு பின் வயோதிகம் காரணமாகவும், உடல்நலக்குறைவாலும் அரசு, கட்சி பணிகளில் இவர் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் உடல்நிலை குன்றியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

வீடு திரும்பினார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், உடல்நலம் தேறியதை அடுத்து வீடு திரும்பினார். இருப்பினும் இவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்த நிலையில்தான் சண்முகநாதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சண்முகநாதன் வீட்டிற்கே சென்று, அவரை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

கையை பிடித்து
எப்படி இருக்கீங்க.. சிகிச்சை பலன் அளிக்கிறதா என்று கேட்டு விசாரித்தார். ஸ்டாலினை பார்த்ததும் சண்முகநாதன் உணர்ச்சிவசப்பட்டு, அவரின் கையைப்பிடித்து உருகினார். தனது அப்பாவிற்கு நெருக்கமான நண்பரை, தனிச்செயலாளரை சந்தித்து "மகன்" ஸ்டாலின் விசாரித்தது திமுகவினரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video

உதயநிதி
முன்னதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், சண்முகநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக டிவிட் செய்த உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும், என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications