Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொதித்து எழுந்த ஸ்டாலின்.. ஏபிவிபியின் கோழைத்தனம்! டெல்லி தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் உட்பட பலர் மீது ஏபிவிபி-யினர் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதான ஏபிவிபி அமைப்பினரின் கோழைத் தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். பெரியார், கார்ல் மார்க்ஸின் படங்களை சிதைத்ததையும் கண்டிப்பதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி யை சேர்ந்தவர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.

அப்போது இடதுசாரி மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் மும்பை ஐஐடி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த முதலாம் ஆண்டு தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நியாயம் கேட்டு ஊர்வலம் சென்று இருக்கின்றனர்.

ஏபிவிபி தாக்குதல்

ஏபிவிபி தாக்குதல்

அந்த சமயத்தில் ஒரு ஆவணப் படத்தை திரையிடவும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் முடிவு செய்து உள்ளார்கள். அப்போது அங்கிருந்த சத்ரபதி சிவாஜி படத்தை மாணவர் ஒருவர் தரையில் வைத்ததால் ஏபிவிபி அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

தமிழ் மாணவரின் மண்டை உடைப்பு

தமிழ் மாணவரின் மண்டை உடைப்பு


பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி மாணவர்களை ஏபிவிபி அமைப்பினர் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் படுகாயம் அடைந்து உள்ளார்கள். நசீர் என்ற தமிழ் மாணவரின் மண்டை உடைக்கப்பட்ட ரத்தம் வழிந்தோடியது.

ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்

மற்றொரு மாணவருக்கு உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வந்த ஆம்புலன்ஸையும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தாக்கியதாக குற்றம்சாட்டி உள்ளனர். படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு மாணவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார்.

ஏபிவிபியின் கோழைத்தனம்

ஏபிவிபியின் கோழைத்தனம்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள மு.க.ஸ்டாலின், "பல்கலைக்கழகங்கள் என்பது வெறும் கல்வி கற்பதற்கான இடங்கள் மட்டுமல்ல. ஆலோசனை நடத்துவதற்கும், விவாதிப்பதற்கும், கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதற்குமான இடம் அவை. தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினரின் கோழைத்தனமான தாக்குதலையும் கண்டிக்கிறேன்.

வேடிக்கை பார்த்த காவல்துறை

வேடிக்கை பார்த்த காவல்துறை

பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் படங்களை சேதப்படுத்தியதை நான் கண்டிக்கிறேன். மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து தங்கள் உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர்கள் மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் அமைதியான பார்வையாளர்களாக மீண்டும் மாறி இருக்கிறார்கள்.

துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பல்கலைக்கழக தலைவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். தாக்கப்பட்ட மாணவர்களுடன் நான் துணை நிற்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு மாணவர்களை பாதுகாக்கவும் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+